வீடுதோறும் மூவண்ணக்கொடி

78 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மும்பை வைல் பார்லேவில் உள்ள மத்திய அலுவலகத்தில் இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் (எம்.எஸ்.எம்.இ) காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணைய (கே.வி.ஐ.சி) அலுவலகத்தில் கொடியேற்றும் விழா நடைபெற்றது. இதனையொட்டி, கேவிஐசி மும்பையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கேவிஐசி தலைவர் தலைமையில்மூவண்ணக்கொடி  யாத்திரையை ஏற்பாடு செய்தனர். வளாகத்தில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட ‘மகாத்மா ஹால்’ ஐ கேவிஐசி தலைவர் திறந்து வைத்தார். இதையொட்டி கலை நிகழ்ச்சிகளுடன் பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கொடியேற்றும் விழாவில் உரையாற்றிய காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் தலைவர் திரு மனோஜ் குமார், 78-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வளாகத்தில் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும், நாடு முழுவதும் உள்ள காதி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள காதி தொழிலாளர்கள், நூற்பாளர்கள், நெசவாளர்கள் மற்றும் தொழில்முனைவோர் ஆகியோருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவர் தமது உரையில், கதர் மூவர்ணக் கொடி என்பது வெறும் துணி மட்டுமல்ல, பிரிட்டிஷ் ஆட்சியின் கொடுமைகளிலிருந்து இந்தியாவை விடுவித்த சுதந்திரப் போராட்டத்தின் எண்ணற்ற புரட்சியாளர்களின் தியாகம், போராட்டம் மற்றும் கனவுகளின் சின்னமாகும் என்று கூறினார். சுதந்தரப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை ஈந்த நமது போராளிகளின் கனவு பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இன்று நிறைவேறுகிறது என்று அவர் மேலும் கூறினார். கடந்த 10 ஆண்டுகளில், வணக்கத்திற்குரிய அண்ணலின் கதர் பாரம்பரியம், வளர்ச்சியடைந்த இந்தியாவின் உத்தரவாதமாக மாறியுள்ளது. காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைப் பாராட்டிய அவர், சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையின் கீழ், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ், காதி மற்றும் கிராமத் தொழில்களின் விற்றுமுதல் 1 லட்சத்து 55 ஆயிரம் கோடியைத் தாண்டியுள்ளது என்றார்.

கடந்த 10 ஆண்டுகளில், காதி மற்றும் கிராமத் தொழில் பொருட்களின் விற்பனை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது, உற்பத்தி நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என்று காதி மற்றும் கிராமத் தொழில் ஆணையத்தின் தலைவர் கூறினார். முன்முறையாக இத்துறையில் 10.17 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன .

இந்த சந்தர்ப்பத்தில், இர்லாவில் அமைந்துள்ள காதி கிராமத் தொழில்கள் ஆணையத்தின் மத்திய அலுவலகத்தால் மூவண்ணக்கொடி யாத்திரை நடந்தது, இதில் உள்ளூர்வாசிகள் மற்றும் கேவிஐசி அதிகாரிகள்மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, கலைஞர்கள் மற்றும் கேவிஐசி ஊழியர்கள் மத்திய தலைமையகத்தில் தேசபக்தி பால்களை பாடினர். இந்த நிகழ்ச்சியின் போது, கேவிஐசி தலைவர் திரு மனோஜ் குமார் ராஜ்பாஷா விசேஷாங்கின் இரண்டாவது பதிப்பையும் வெளியிட்டார், மேலும் வருடாந்திர விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களும் பாராட்டப்பட்டனர். நிகழ்ச்சியில் கேவிஐசி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்..

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பி ...

‘ராணுவ மோதல்கள் தீர்வாகாது’- பிரதமர் மோடி மேற்கு ஆசியா மற்​றும் உக்​ரைன் போர்​களுக்கு விரைவில் முடிவு ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இர ...

“இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; -இந்திய ஷியா பிரிவு முஸ்லீம் தலைவர். "இந்தியாவிற்கு விசுவாசமாக இருங்கள்; இறந்தவர்கள் நம் தலைவர்கள் அல்ல"- ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சிய ...

நேட்டோ நாடுகளுக்கே அதிர்ச்சியினை கொடுத்த ஈரான் ஈரானின் செயல்பாடுகள் விபரீதமாக உள்ளன, யாரும் எதிர்பாராதபடி துருக்கியினை ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் ...

தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா தமிழக புதிய கவர்னர் அஜய்குமார் பல்லா அமித்ஷாவின் ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையி ...

பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான அரசுக்கு காங்கிரஸ் பாடமெடுப்பதெல்லாம் நகைப்புக்குரியது. ஈரனின் ஐஆர்ஐஎஸ் தேனா போர்கப்பல் இந்தியாவின் கடற்கரையிலிருந்து 200 ...

வெளியுறவுக் கொள்கை காலாவதியான ...

வெளியுறவுக் கொள்கை   காலாவதியான காங்கிரஸின் சித்தாந்தங்களால் அல்ல “இந்தியா கண்மூடித்தனமாக ஈரான் பக்கம் நிற்க வேண்டும் என்று ...

மருத்துவ செய்திகள்

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...