17-வது சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா சாதனை

2024- ஆகஸ்ட் 08 முதல் 16 வரை சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெற்ற சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் போட்டிளின் 17-வது பதிப்பில் இந்திய மாணவர் அணி பல மதிப்புமிக்க பதக்கங்களை வென்றுள்ளது. குஜராத், கேரளா, சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த நான்கு மாணவர்களைக் கொண்ட இந்திய அணி மூன்று போட்டி பிரிவுகளில் (தியரி அண்ட் பிராக்டிகல், எர்த் சிஸ்டம் ப்ராஜெக்ட் மற்றும் இன்டர்நேஷனல் டீம் ஃபைல்டு இன்வெஸ்டிகேஷன்) தலா மூன்று தங்கம் மற்றும் வெண்கலம் மற்றும் இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளது.

மத்திய புவி அறிவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனிப்பொறுப்பு), அணுசக்தி, விண்வெளி, பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இந்திய குழுவினரைப் பாராட்டியதோடு, நாட்டிற்கு மதிப்புமிக்க கல்வி பெருமையை கொண்டு வந்ததற்காக பாராட்டுகளைத் தெரிவித்தார்.

“சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட் என்பது புவி அறிவியல் அமைச்சகத்தின் ரீச்அவுட் (ஆராய்ச்சி, கல்வி, பயிற்சி மற்றும் அவுட்ரீச்) திட்டத்தின் கீழ் திறன்மிக்க  மாணவர்களை மையமாகக் கொண்ட மிகவும் வெற்றிகரமான திட்டங்களில் ஒன்றாகும். நமது இளம் புவி அறிவியல் சாதனையாளர்களை நினைத்து நாம் பெருமிதம் கொள்கிறோம்” என்று இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் டாக்டர் எம்.ரவிச்சந்திரன் வெற்றியாளர்களை வாழ்த்தினார்.

கனடாவின் கல்கரியில் நடந்த சர்வதேச புவி அறிவியல் கல்வி அமைப்பு கவுன்சில் கூட்டத்தில் 2003 இல் நிறுவப்பட்ட சர்வதேச புவி அறிவியல் ஒலிம்பியாட்  அமைப்பு உலகெங்கிலும் உள்ள மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான வருடாந்திர போட்டியாகும். குழுப்பணி, ஒத்துழைப்பு, யோசனைகளைப் பரிமாறிக் கொள்ளுதல் மற்றும் போட்டி ஆகியவற்றின் மூலம் புவி அறிவியல் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தியா 2007 முதல் இந்த அமைப்பில் பங்கேற்றுள்ளது. அதன் பத்தாவது பதிப்பை மைசூரில் நடத்தியது. இந்த ஆணடு, 17 வது ஒலிம்பியாட்டில்  35 நாடுகளைச் சேர்ந்த அணிகள் கலந்து கொண்டன. அவற்றில் 32  அணிகள் இறுதிப் போட்டிக்கு வந்தன. தியரி அண்ட் பிராக்டிகல், எர்த் சயின்ஸ் ப்ராஜெக்ட்,  இன்டர்நேஷனல் டீம் ஃபீல்ட் இன்வெஸ்டிகேஷன்,டேட்டா மைனிங் ஆகிய நான்கு பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.

இந்திய மாணவர்களின் (9 முதல் 12 ஆம் வகுப்பு வரை) பங்கேற்பை ஊக்குவிப்பதற்காக, இந்தியா முழுவதும் பல்வேறு பள்ளிகளில் நடைபெறும் இந்திய தேசிய புவி அறிவியல் ஒலிம்பியாட் போட்டிக்கு மத்திய புவி அறிவியல் அமைச்சகம்   ஆதரவளிக்கிறது. நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி அமைப்புகளுடன் இணைந்து இந்திய புவியியல் சங்கத்தால் ஆண்டுதோறும் இது எளிதாக்கப்படுகிறது. மாணவர்களுக்கான மதிப்பீட்டிற்கான தலைப்புகளில் புவியியல், வானிலை அறிவியல், கடலியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் ஆகியவை அடங்கும். இந்திய தேசிய புவி அறிவியல் ஒலிம்பியாட் போட்டிகளில்  சிறந்த செயல்திறன் கொண்ட பங்கேற்பாளர்கள் சர்வதேச ஒலிம்பியாட்டில்  இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். இது அமைச்சகத்தின்  ஆதரவையும் பெறுகிறது..

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...