இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது – மோடி பெருமிதம்

‘பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, காலநிலை மாற்றம் போன்ற உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில், நம்பிக்கை ஒளியாக இந்தியா உள்ளது,’ என பிரதமர் மோடி தெரிவித்தார்.

டில்லியில் நடந்த தனியார் ‘டிவி’ நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது: இந்தியா அனைத்து துறைகளிலும் செயல்பட்டு வருகிறது. இது முன்னெப்போதும் இல்லாத அளவில், சென்று கொண்டிருக்கிறது. பல்வேறு கவலைகளில், மூழ்கியுள்ள உலகிற்கு இந்தியா நம்பிக்கை அளிக்கிறது. நாங்கள் 3வது முறையாக, ஆட்சி அமைத்து, 125 நாட்கள் முடிவடைந்துள்ளது. ரூ.9லட்சம் கோடி மதிப்பிலான கட்டமைப்பு திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன.

15 புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. சென்செக்ஸ் மற்றும் நிப்டி 125 நாட்களில் 6 முதல் 7 சதவீதம் உயர்ந்துள்ளது. அந்நிய செலவாணி 700 பில்லியனுக்கு மேல் அதிகரித்துள்ளது. 9 விமான நிலையங்கள் கட்டுமானம் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சி, முதலீடு குறித்து உலகம் உற்சாகம் அடைந்துள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் உள்கட்டமைப்பைப் பார்த்து உலகம் வியக்கிறது.

வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரங்கள், வேலையின்மை மற்றும் காலநிலை மாற்றம் போன்ற பல உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்தியா உலகின் நம்பிக்கை ஒளியாக திகழ்கிறது. உலக அளவில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகமாக இருக்கிறது.

உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் இந்தியா வேகமாக வளர்ந்து வருவது பற்றி மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்தியாவின் பொருளாதாரம் , 1 டிரில்லியன் டாலர் ஜி.டி.பி.,யை எட்ட 63 ஆண்டு ஆனது. ஆனால் 2 டிரில்லியன் டாலரை எட்டுவதற்கு ஏழு ஆண்டுகள் மட்டுமே ஆனது. 2020ம் ஆண்டில் 3 டிரில்லியன் டாலராக அதிகரித்தது. உலகின் 11வது பொருளாதாரமாக இருந்த இந்தியா, பத்தாண்டுகளில் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் என்ற இடத்துக்கு முன்னேறி உள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி க ...

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள் – அண்ணாமலை கேள்வி அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அ ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தஸ்ய கல்வி கொள்கை – மத்திய கல்வி  அமைச்சர் 'புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவோம் – பிரதமர் மோடி அறிவுரை டில்லியில் இன்று (பிப்.,17) அதிகாலை நில அதிர்வு உணரப்பட்ட ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ 9 லட்சம் கோடி ஏலக்காய் எட்டும் – பிரதமர் மோடி உறுதி 'ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.9 ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் R ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் – ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் 'யாரையும் புண்படுத்தும் விஷயங்களை நாங்கள் செய்ய மாட்டோம்' என ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப்பது மகிழ்ச்சி – பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...