கடந்த வாரம் கூட தமிழக அரசு அதிகாரிகள், அதானி நிறுவன அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது: கோர்ட் உத்தரவுப்படி, இந்து சமய அறநிலையத்துறையின் கணக்கு வழக்கு தொடர்பான எந்த ஆவணங்களையும் சி.ஏ.ஜி., அமைப்புக்கு கொடுக்கலை. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். எதுக்காக இந்து சமய அறநிலையத்துறை இருக்கக் கூடாது என்பதற்கு இது உதாரணமாகும். 4 லட்சம் ஏக்கருக்கு மேலே இந்து அறநிலையத்துறையிடம் இருக்கு. ஆயிரமாயிரம் கோவில்கள் இருக்கு. வருமானம் இருக்கு.
பணம் எப்படி வருது, பணம் எப்படி செலவாகுது என்பதை ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டும். ஐகோர்ட் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசின் செயல்பாடு இருக்கு. தமிழக அரசு மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடுக்கப் போகிறோம்.
அதளபாதளத்தில் தமிழக அரசு இயந்திரம் செயல்பட்டுக் கொண்டிருப்பதை இந்த தணிக்கை உறுதி செய்துள்ளது. அடுத்த தணிக்கை நடத்த 4 ஆண்டுகளாகும். ஒரு இன்டிகேட்டர் நல்லா இருக்குனா, 99 இன்டிகேட்டர் மோசமாக இருக்கு. ஒவ்வொரு டிபார்ட்மென்ட்டின் நிலை குறித்து பத்திரிக்கையாளர்கள் எடுத்துக் காட்ட வேண்டும்.
அதானிக்கும், தி.மு.க., அரசு ஒப்பந்தம் கொடுத்திருப்பதை தொடர்ந்து பேசி வருகிறோம். அமைச்சர் ஒருவர் அது அ.தி.மு.க., ஆட்சியில் கொடுத்தது என்கிறார். ஆனால், தி.மு.க., ஆட்சியில் கமுதி சோலார் பவர் பிளான்ட் கொடுத்து இருக்கிறார்கள்.
முதல்வர் நேற்று சட்டசபையில் பேசும் போது, அதானியை சந்தித்ததாக எதிர்க்கட்சிகள் அபாண்ட குற்றச்சாட்டை சுமத்துவதாகக் கூறினார். ஆனால், எங்கேயும் முதல்வர் அதானியை சந்தித்தார் என்று நாங்கள் சொல்லவே இல்லை. அதானியை சந்திப்பது குற்றமே இல்லை.
முதல்வரின் மருமகனும் அதானியும் சந்திச்சிருக்காங்க. உங்கள் சார்பில் அரசு அதிகாரிகளும், அதானி நிறுவன அதிகாரிகளை சந்தித்துள்ளார்கள். போன வாரமும் சந்திப்பு நடந்துள்ளது. உங்கள் மருமகன் சந்திப்பது நீங்கள் சந்தித்ததைப் போலத் தானே. உங்கள் மருமகன் சந்திக்கவே இல்லை என்று சட்டசபையில் கூற முடியுமா. அப்படி கூறுங்கள், நாங்கள் ஆதாரத்தை வெளியிடுகிறோம். அதானியை சந்திக்கவில்லை என்று மடை மாற்றுவதை அவர் கைவிட வேண்டும்.
பா.ஜ.,வினர் விவசாய நண்பர்களை சந்தித்து பேசியுள்ளனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, டங்ஸ்டன் சுரங்கத்தை ரத்து செய்ய வேண்டும். நாளை காலை டில்லியில் நானும், அமைச்சர் எல்.முருகனும், மத்திய அமைச்சர் கிஷண் ரெட்டியை சந்தித்து இது தொடர்பாக பேச உள்ளோம். டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக ஆங்கிலப் பத்திரிக்கையில் முன்பே கட்டுரை வெளியிட்டுள்ளார்கள். இந்த சுரங்கத்திற்காக, தமிழக அரசு சார்பில் எந்த தரவுகளும் கொடுக்கவில்லை என்று கூற முடியுமா?
விவசாயிகளின் குரலை பிரதமர் மோடி எப்போதும் கேட்பார், இந்த முறையும் அது நடக்கும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ... |
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |