இந்திய ராணுவ வீரர்களின் தன்னலமில்லா அர்ப்பணிப்பும், அசைக்க முடியாத உறுதியும், நாட்டை பாதுகாத்து நமக்கு பெருமை சேர்த்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
1971ம் ஆண்டு வங்கதேசம் தனிநாடாக பிரிந்த போது, பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா பெற்றி பெற்றது. இந்த நாளை விஜய் திவாஸ் என்று ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் போரில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.
அந்த வகையில், விஜய் திவாஸை முன்னிட்டு பிரதமர் மோடி, ராணுவ வீரர்களின் தியாகத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘1971ம் ஆண்டு இந்தியாவின் வரலாற்று வெற்றிக்காக தியாகம் செய்த தைரியமிக்க ராணுவ வீரர்களை இந்நாளில் போற்றுவோம்.
இந்திய ராணுவ வீரர்களின் தன்னலமில்லா அர்ப்பணிப்பும், அசைக்க முடியாத உறுதியும் நம்முடைய நாட்டை பாதுகாத்து நமக்கு பெருமை சேர்த்துள்ளது. அவர்களின் அசாதாரண வீரம் மற்றும் ஆன்மாவுக்கு அஞ்சலி செலுத்துவோம். இவர்களின் தியாகம் இளைய தலைமுறையினருக்கு ஊக்கமளிக்கும்,’ என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ... |
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |