அம்பேத்கருக்கு எதிரான கட்சி காங்கிரெஸ் தான் -அமித் ஷா பதிலடி

 அம்பேத்கருக்கு எதிரான கட்சி காங்., தான். அவர் முழங்கிய இட ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டு, தற்போது அவரது பெயரில் அரசியல் செய்கிறது,” என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

டில்லியில் பா.ஜ., தலைமை அலுவலகத்தில் நிருபர்களிடம் அமித்ஷா கூறியதாவது; அம்பேத்கர் விவகாரத்தில் உண்மையை மறைக்க காங்., முயற்சி செய்கிறது. இதனால் என் பேச்சின் ஒரு பகுதியை மட்டும் எடுத்து திரித்து குறை கூறுகின்றனர். என் பேச்சை முழுமையாக கேட்க வேண்டும்.

தரவுகளின் அடிப்படையில் மட்டுமே பார்லி.,யில் பேச முடியும். மகளிர், அரசியலமைப்பு, அம்பேத்கருக்கு எதிரான கட்சி காங்., நமது நாட்டின் தியாகிகள், ராணுவம், பெண்களை அக்கட்சி அவமதிக்கிறது. அக்கட்சி தனக்கு தானே பாரத ரத்னா விருது கொடுத்துக் கொண்டது. அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கு நேருவும், இந்திராவும் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்., ஆட்சியை இழந்த பிறகு தான் அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

நேரு உள்ளிட்ட காங்கிரசார் மட்டுமே அம்பேத்கரை குறைத்து மதிப்பிட்டனர். நேரு தனது புத்தகத்தில் அம்பேத்கர் பற்றிய எதிர்ப்பு இருந்தது. அம்பேத்கர் சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த போது, பிரதமராக இருந்த நேருவுக்கு எழுதிய கடிதத்தில், இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து பி.சி.ராய் குறிப்பிட்டு இருந்தார். ஆனால், ராஜினாமாவால் அமைச்சரவை பலவீனம் அடையாது என நேரு கூறினார். காங்., அம்பேத்கரை எப்படி அவமதித்ததற்கு என்பதற்கு இதை விட வேறு உதாரணங்கள் இருக்க முடியாது. அவரின் ராஜ்யசபா பேச்சுகளை காங்கிரஸ் அழித்தது.

அவரின் பிறந்த நாளைக் கூட அக்கட்சி கொண்டாடவில்லை. அம்பேத்கரின் கொள்கையை உயர்த்தி பிடிப்பது மோடி அரசு மட்டுமே. அவரை பா.ஜ., எதிர்க்கவில்லை. அவரின் புகழை உலகம் முழுதும் நிலை நாட்டினோம். பா.ஜ.,வினர் அம்பேத்கர் கொள்கையை பின்பற்றுகிறார்கள். ஆனால், அவரின் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் உள்ளது.

இந்தியாவை பிளவுபடுத்தும் வகையில் அந்நிய மண்ணில் இருந்து காங்கிரஸ் கருத்து தெரிவித்து வருகிறது. 1952க்கு பிறகு நடந்த இடைத்தேர்தல்களிலும் அம்பேத்கரை தோற்கடிக்க வேண்டும் என்பது காங்கிரசின் நோக்கமாக இருந்தது. இரண்டு முறை தோற்கடித்தது. அவர் முழங்கிய இட ஒதுக்கீட்டை எதிர்த்தவர்கள் இன்று அம்பேத்கர் பெயரில் அரசியல் செய்கின்றனர்.

நான் ராஜினாமா செய்ய வேண்டும் என கார்கே சொல்கிறார். இது அவருக்கு மகிழ்ச்சி அளிக்கும் என்றால், நான் அதனை செய்வேன். ஆனால்,அத்துடன் அவரது பிரச்னை தீராது. ஏனென்றால், அடுத்த 15 ஆண்டுகள் அவர் எதிர்க்கட்சி வரிசையிலேயே இருக்க வேண்டி இருக்கும். இவ்வாறு அமித்ஷா கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்பேத்கருக்கு துரோகம் செய்த க ...

அம்பேத்கருக்கு துரோகம் செய்த காங்கிரஸ் இன்று நடிக்கிறது மாநிலங்களின் சம்மதத்துடன் இந்த நாடு உருவாகவில்லை.. இந்த நாட்டுடைய வசதிக்காக ...

சபையை செயல்பட விடாமல் தடுப்பதே ...

சபையை செயல்பட விடாமல் தடுப்பதே வெற்றி என்று எதிர்க்கட்சிகள் நினைப்பது மக்களுக்கு  தெரியும் மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு , ' ஐந்தாண்டு ...

நேச நலனுக்கு தேவையானதை பயப்படா ...

நேச நலனுக்கு தேவையானதை பயப்படாமல் செய்வோம் – ஜெய்சங்கர் 'எங்களுடைய தேச நலனுக்காகவும், உலக நலனுக்காகவும் எது சரியானதோ ...

ஜெர்மனியில் நடந்த கொடூர தாக்கு ...

ஜெர்மனியில் நடந்த கொடூர தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் ஜெர்மனி சந்தையில், நடந்த கொடூரமான தாக்குதலுக்கு மத்திய வெளியுறவுத் ...

இந்தியா-குவைத் உறவு மேலும் வலுப ...

இந்தியா-குவைத் உறவு மேலும் வலுப்படும் : பிரதமர் மோடி பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு ம ...

பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக குவைத் பயணம் பிரதமர் மோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக ...

மருத்துவ செய்திகள்

ஆள்வள்ளிக்கிழங்கு

இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...