கர்நாடக மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, கடந்தாண்டு நவம்பரில் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். தற்போது, மாநிலத்தில் அவருக்கு எதிராக அதிருப்தியாளர்கள் குரல் கொடுத்து வரும் நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
பிரதமரை சந்தித்த படத்தை தன் ‘எக்ஸ்’ பக்கத்தில் பகிர்ந்து விஜயேந்திரா குறிப்பிட்டு உள்ளதாவது:
நாட்டின் வளர்ச்சிக்காக துறவி போன்று, தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட பிரதமரை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஊக்கம் அளிக்கிறது. அவரின் ஆசிர்வாதம், வழிகாட்டுதல், கர்நாடகாவில் கட்சியை மேம்படுத்த உற்சாகத்தை அளித்துள்ளது. அவர் கூறிய வார்த்தைகள், தேசத்தை வலுப்படுத்தும் பணியில், இளைஞர்களின் பங்கு பெறுவதற்கான திட்டங்களை உருவாக்குவதுடன், அமைப்பின் வளர்ச்சிக்கும் உத்வேகம் அளிக்கிறது.
இந்தியாவின் பொருளாதாரம், தொழில், கல்வி துறைகளின் முன்னேற்றம், உலகளவில் வெற்றி பெறுவதில், நம் நாடு கணிசமான பங்கு வகிக்கிறது. இதில் கர்நாடகாவின் பங்கு இருக்க வேண்டுமெனில், மத்திய அரசின் திட்டங்கள், மக்களுக்கு சென்றடைய வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள் குறித்து, பொது மக்களுக்கு சென்றடைய, கட்சி தொண்டர்களை தயார்படுத்தும்படி பிரதமர் பரிந்துரைத்துள்ளார்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ... |
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |