டில்லியில் ஆம் ஆத்மியின் தோல்விக்கு யமுனை அன்னையின் சாபமே காரணம், என முன்னாள் முதல்வர் அதிஷியிடம், கவர்னர் சக்சேனா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
யமுனை நதி கடும் மாசுபாடு அடைந்துள்ளது. இதனை புதுப்பிப்பது தொடர்பான நடவடிக்கை எடுக்க டில்லி கவர்னர் தலைமையில் குழு அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்து இருந்தது. இதற்கு முதலில் வரவேற்பு தெரிவித்த கெஜ்ரிவால் அரசு, பிறகு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. கடந்த 2015ல் யமுனை நதியை சுத்தம் செய்வோம் என கெஜ்ரிவால் உறுதி அளித்து இருந்தார். தற்போது, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை செயல்படுத்தினால், ஆம் ஆத்மிக்கு நற்பெயர் கிடைக்காது என்ற பயத்தில் கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததாக தகவல் வெளியானது.
தேர்தல் பிரசாரத்தின் போது இதனையே சுட்டிக்காட்டி பா.ஜ., தீவிர பிரசாரம் செய்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தூய்மைபடுத்துவோம். அதில், சாத் பூஜையின் போது பக்தர்கள் புனித நீராடலாம் எனக்கூறியது. இதனால், இப்பண்டிகையின் போது, பீஹார், ஜார்க்கண்ட், உ.பி.,யைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர், இந்த நதிக்கரையில் வழிபடுவது வழக்கம்.
டில்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ., 48 இடங்களில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மிக்கு 22 இடங்கள் மட்டுமே கிடைத்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில், மேற்கண்ட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர் பா.ஜ.,வுக்கு ஓட்டுப்போட்டுள்ளது தெரியவந்துள்ளது.
பதவி பறிபோனதால், நேற்று முதல்வராக இருந்த அதிஷி, கவர்னர் சக்சேனாவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார்.
அப்போது, சக்சேனா, யமுனை நதியை சுத்தம் செய்வதற்கு இடையூறு செய்தீர்கள். இதனால், யமுனை அன்னையின் சாபத்தால், உங்களுக்கு தோல்வி ஏற்பட்டது எனக்கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு அதிஷி எந்த பதிலும் அளிக்காமல் கிளம்பியதாக டில்லி வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |