உ.பி -யில் நடப்பட்டுள்ள 210 கோடி மரங்கள் – முதல்வர் யோகி ஆதித்யநாத் நாத் பெருமிதம்

கடந்த 8 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 210 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளதாக உ.பி. முதல்வர் ஆதித்யநாத் கூறினார்.

தேசிய துாய்மை காற்று திட்டம் குறித்த தேசிய மாநாடு கூட்டம் கோரக்பூரில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் ஆதித்யநாத் கலந்துகொண்டு பேசியதாவது:

மாநிலத்தில் தொழில்துறை வளர்ச்சி மற்றும் நகரமயமாக்குதல் ஆகியவை குறிப்பிடத்தக்க அளவில் வளர்ந்துள்ள நிலையிலும் கடந்த 8 ஆண்டுகளில், மாநிலம் முழுவதும் 210 கோடி மரங்கள் வெற்றிகரமாக நடப்பட்டுள்ளது.

இதன்மூலம் மாநிலத்தின் வனப்பகுதி கணிசமாக அதிகரித்துள்ளது. இந்த பாரம்பரிய மரங்கள் நடும் முயற்சி, , உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள வனத்துறை ஆய்வு மையம் மற்றும் சத்தீஸ்கர் பல்கலை கண்காணிப்பில் நடந்தது.

காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு, காற்றின் தரத்தை மேம்படுத்துவது மற்றும் உயிரியல் பல்வகைமையை மேம்படுத்துவது ஆகியவற்றுக்காக மாநிலம் மேற்கொண்ட முயற்சியின் ஒரு பகுதியாகும்.

இந்த முன்முயற்சி, தேசிய பசுமை இந்தியா திட்டம் போன்ற தேசிய இலக்குகளுடன் இணைந்து, சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான மாநிலத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.

இந்நடவடிக்கையால் அதிகரித்த வனப்பகுதி, சுற்றுச்சூழல் சமநிலை, நீர் பாதுகாப்பு மற்றும் கிராமப்புற வாழ்வாதாரங்களில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு ஆதித்யநாத் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

மருத்துவ செய்திகள்

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்

வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...