2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு

தற்போது தமிழக சட்டபேரவை கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து வெளியான தகவலில் டெல்லியில் கட்டப்பட்டுள்ள அதிமுக அலுவலகத்தை பார்வையிட எடப்பாடி பழனிசாமி செல்வதாக கூறப்பட்டது. அதேநேரம் தற்பொழுது அதிமுகவில் கூட்டணிநிலைப்பாடுகள் குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டுவரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பாஜக தலைவர்களைச் சந்திக்க இருப்பதாகவும், திரைமறைவில் இந்தசந்திப்பு நடக்கலாம் என்றும் கூறப்பட்டது. இதற்கிடையே எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் கே.பி. முனுசாமி ஆகியோரும் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் ஆத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெறுமா என்ற கேள்விக்கு ‘பாஜக கிஜக என எந்தகட்சியாக இருந்தாலும் கூட்டணி குறித்த தகவல்கள் இன்னும் ஆறுமாத காலத்திற்குப் பின்னர் தெரியவரும். நாங்களே செய்தியாளர்களைச் சந்தித்து கூட்டணிகுறித்து தெரிவிப்போம்’ என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். அதேசமயம் அண்மையில் நடைபெற்ற ஜக்கியின் சிவராத்திரி விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அதேநிகழ்வில் கலந்து கொண்ட எஸ்.பி. வேலுமணி நெருக்கம் காட்டியபின்னரே மீண்டும் பாஜக – அதிமுக கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கருத்துக்கள் எழுந்தது.

இந்நிலையில் சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி மத்திய அமைச்சருடன் சந்தித்துப் பேசினார் . முன்னதாக அதிமுக அலுவலகத்தை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சுமார் 2 மணிநேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கு பிறகு அமித் ஷா தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “2026ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல்புயலும் முடிவுக்கு வந்துவிடும்.” அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமித் ஷா, ஈபிஎஸ் இடையே சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடைபெற்றது. விரிவான இந்த ஆலோசனையின்போது தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம், 2026 சட்டமன்ற தேர்தல், விஜயின் அரசியல் வருகை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொண்டதாக தெரிகிறது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள ...

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு; பிரதமர் மோடி பெருமிதம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை அரசு உறுதி செய்கிறது'' ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் & ...

பாகிஸ்தான் மக்கள் வெளியேறலாம் – மத்திய அரசின் முடிவை அமல்படுத்திய டில்லி பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற மத்திய ...

இந்திய ராணுவம் பதிலடி

இந்திய ராணுவம் பதிலடி காஷ்மீர் எல்லைக்கோட்டுப் பகுதியின் பல்வேறு இடங்களில் நள்ளிரவில் பாகிஸ்தான் ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர ...

பயங்கரவாத தாக்குதலை தாண்டி அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக நடைபெறும்; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தாண்டி, அமர்நாத் யாத்திரை வெற்றிகரமாக ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வ ...

இனி பயங்கரவாதிகள் தான் நடுங்க வேண்டும் ''பஹல்காமில் பயங்கரவாதிகள் எந்த பயமும் இல்லாமல் அப்பாவி மக்களை ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர ...

நக்சல்களை சுற்றி வளைத்த 10,000 வீரர்கள் சத்தீஸ்கர் - தெலுங்கானா - மஹாராஷ்டிரா எல்லையில், நக்சல்களுக்கு ...

மருத்துவ செய்திகள்

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...