கிறிஸ்தவ மக்களின் புனித நாள்களில் ஒன்றாக கருதப்படும் புனித வெள்ளி இன்று அனுசரிக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவையில் அறையப்பட்டதையும் குறிக்கும் விதமாக இருக்கும் இந்நாளில் பங்கேற்க கிறிஸ்துவ மக்கள், தவக்காலம் எனப்படும் இந்த 40 நாட்கள் நோன்பிருந்து தங்களது பாவங்களுக்காக மனம்வறுந்தி, இரக்கம் நிறைந்த புது மனிதனாக வாழ தங்களது தயாரித்து கொள்ளும் நாட்கள் இவை.
இந்த சிலுவை பாடு புனித பயணத்தின் போது 12 ஸ்தலங்களில் உயிர் ஓவிய நிகழ்ச்சி நடத்தப்பட்டு இயேசுபிரான் சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வு நினைவு கூறப்பட்டது. சிலுவையை சுமந்தபடி இயேசுபிரான் முள்கிரீடம் அணிவித்து சாட்டையால் அடித்து துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட காட்சிகள் சிலுவை பாடு பயணத்தில் தத்ரூபமாக இடம்பெற்றது.
இந்தவகையில், கிறிஸ்துவர்களின் புனித நாளாக கருதப்படும் புனித வெள்ளி குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
அதில்,
“புனித வெள்ளி நாளில் நாம் இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவுகூருகிறோம். இந்த நாள் நம்மை கருணை, இரக்கம் ஆகியவற்றைப் போற்றவும், எப்போதும் பரந்த மனதுடன் இருக்கவும் தூண்டுகிறது. அமைதியும், ஒற்றுமை உணர்வும் எப்போதும் மேலோங்கட்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
ஒரு கைப்பிடியளவு இலந்தையின் கொழுந்து இலையை ஒரு புதுச்சட்டியில் போட்டு நன்றாக வதக்கிய ... |