காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் தலைவர்கள் கண்டனம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 28க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

ஜனாதிபதி திரவுபதி முர்மு

காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. இது ஒரு கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற செயலாகும். இதுகண்டனத்திற்கு .ரியது. சுற்றுலா பயணிகளை தாக்குவது என்பது கொடூரமானது மற்றும் மன்னிக்க முடியாதது. உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும்.

பிரதமர் மோடி

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும். இந்த கொடூர செயல்களுக்கு பின்னால் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் தப்பிக்க முடியாது. இந்த மோசமான திட்டம் வெற்றி பெறாது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற தீர்மானம் அசைக்க முடியாதது. அது இன்னும் வலிமையாகி உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

கொடூரமான பயங்கரவாத சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தப்ப விட மாட்டோம். கடுமையாக தண்டிப்போம்.

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

பஹல்காமில் நடந்த கோழைத்தனமான தாக்குதலுக்கு கண்டனம். பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக எனது எண்ணம் உள்ளது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.

லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல்

காஷ்மீரில் சுற்றுலா பயணி உயிரிழக்கவும் காயமடைந்ததற்கு காரணமான தாக்குதல் சம்பவம் கண்டனத்திற்கு உரியது. மனம் வேதனை அளிக்கிறது. இறந்தவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் .பயங்கரவாதத்திற்கு எதிராக ஒட்டு மொத்த நாடும் ஒன்றுபட்டு உள்ளது. காஷ்மீரில் அமைதியான சூழ்நிலை நிலவுகிறது எனக் கூறுவதை விட்டுவிட்டு, மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதன் மூலம் இந்த கொடூரமான சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்கும். அப்பாவி இந்தியர்கள் உயிர் இழக்க மாட்டார்கள்.

காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹாபயங்கரவாதிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்த நாடும் கோபத்தில் உள்ளது. வீரர்களின் ரத்தம் கொதிக்கிறது. இந்த கொடூரமான செயலுக்கு காரணமானவர்கள் கடுமையான விலை கொடுப்பார்கள் எனு உறுதி அளிக்கிறேன்.

காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லாஇந்த சம்பவம் அதர்ச்சி அளிக்கிறது. சம்பவத்திற்கு காரணமானவர்கள் விலங்குகள் ஆகவும், மனத நேயத்திற்கு எதிராகவும் இருப்பவர்கள். கண்டனம் தெரிவிக்க வார்த்தைகள் போதாது. உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

தேஜஸ்வி சூர்யா பா.ஜ., எம்.பி கூறியதாவது:

இன்று அதிகாலை பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட ஸ்ரீ மஞ்சுநாத்தின் மனைவி திருமதி பல்லவியுடன் நான் பேசினேன். அவர்கள் கர்நாடகாவின் ஷிமோகாவைச் சேர்ந்தவர்கள்.

காயமடைந்த மற்ற குடும்ப உறுப்பினர்களுடனும் பேசியுள்ளோம். உள்ளூர் நிர்வாகம் அவர்களைத் தொடர்பு கொண்டு அவர்களின் தங்குமிடம் மற்றும் பாதுகாப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

கர்நாடக தலைமைச் செயலாளருடனும் நான் பேசினேன். அனைவரும் பாதுகாப்பாக வீடு திரும்புவதை உறுதிசெய்ய நாங்கள் ஒருங்கிணைப்போம்.

ஸ்டாலின், இ.பி.எஸ்., விஜய் கண்டனம்

காஷ்மீரில் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., த.வெ.க., தலைவர் விஜய் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மனதை நொறுங்கச் செய்த நிகழ்வு: ஜ ...

மனதை நொறுங்கச் செய்த நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல் ஆமதாபாத் விமான விபத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் ...

50 வாக்குறுதியைக் கூட நிறைவேற்ற ...

50 வாக்குறுதியைக் கூட நிறைவேற்றாத தி.மு.க.,: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க., அளித்த 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் 50ஐ ...

மகளிரை அவமதிக்கும் தி.மு.க., இனிய ...

மகளிரை அவமதிக்கும் தி.மு.க., இனியாவது திருந்தட்டும்; நயினார் நாகேந்திரன் காட்டம் ''மகளிரை அவமதிக்கும் தி.மு.க., அரசு இனியாவது திருந்தட்டும்'' என ...

அ.தி.மு.க-வுக்கு இணையான தொகுதிகள ...

அ.தி.மு.க-வுக்கு இணையான தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிட வேண்டும்: மோடிக்கு அண்ணாமலை கடிதம் 2026 தேர்தலில் அதிமுக போட்டியிடும் தொகுதி எண்ணிக்கையில் சரிபாதியில் ...

அகமதாபாத் விமான விபத்து – மீட்ப ...

அகமதாபாத் விமான விபத்து – மீட்பு நடவடிக்கையை விரைவுப்படுத்த பிரதமர் மோடி உத்தரவு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அகமதாபாத்திற்கு விரைந்து ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...