கணபதியின் பிரபாவம்

 கணபதியின் பிரபாவம் ஒருமுறை பிரணவ வனத்தில் பராசக்தி பெண் யானை வடிவு கொண்டு ஓடினாள். சிவபெருமான் அவளை ஆண் யானை வடிவுடன் பின்தொடர்ந்தார். அந்த வேளையில் இருவருக்கும் இடையே யானை வடிவில் ஒரு சக்தி வெளிப்பட்டது. தெய்வ நல்வடிவுடன் கூடிய அக்குழந்தையை சிவசக்தியர் அணைத்து மகிழ்ந்தனர். அவரைக்

கணங்களின் அதிபதியாக்கி கணபதி என்று பெயர் சூட்டினார் சிவபெருமான்; கணபதியைத் தம் மடி மீது அமர்த்திப் பட்டாபிஷேகம் செய்தார்.

அக்கோலம் "ஆனைமுகற்கு அருளிய அண்ணல்' என்று கொண்டாடப்படுகிறது. அதனால் சிவனை கஜ அனுக்கிரகர் என்றும், விக்னேசப் பிரசாதர் எனவும் அழைப்பர். சிவன் ஆண் யானையாகவும், அம்பிகை பெண் யானையாக வும் இருக்க விநாயகரான கணபதி தோன்றினார் என்பதை திருஞான சம்பந்தர் பின்வருமாறு அருளிச் செய்துள்ளார்:

பிடியதன் உருவுமை கொள மிகு கரியது, வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர் கடி கணபதி வர அருளினன் மிகு கொடை வடிவினர் பயில்வலி வலம் உறை இறையே!

ஐராவத விநாயகர்

மதுரையில் ஐராவதம் வழிபட்ட லிங்கமும் தீர்த்தமும் அதன் பெயரால் முறையே ஐராவத லிங்கம், ஐராவத தீர்த்தம் என வழங்கப்படுகின்றன.

ஆனையூரணி தீர்த்தத்தில் விநாயகரை ஐராவதம் அமைத்து வழிபட்டதால் ஐராவத விநாயகர் என்றும், விநாயகர் கோயிலுள்ள இடம் ஐராவதநல்லூர் எனவும் அழைக்கப்படுகின்றன. திருப்பனந்தாளிலும் ஐராவதம், ஐராவத விநாயகர் என்னும் பெயரில் விநாயகரை அமைத்து வழிபட்டதுடன் ஐராவத தீர்த்தத் தையும் அமைத்தது. திருப்பனந்தாளில் இறைவனை இந்திரனின் வாகனமான ஐராவதம் பூஜித்தது போல் அவரது கற்பகமரம், சிந்தாமணி, காமதேனு ஆகியனவும் விநாயகரைப் பூஜித்துப் பேறு பெற்றன. அவற்றின் பெயரால் சிந்தாமணி விநாயகர், தேனு விநாயகர் எனும் பெயர்களைப் பெறுகிறார்

வந்தவாசிக்கு அருகிலுள்ள தலம் வழுவூர். வழுவை என்றால் யானை. இத்தலத்திலுள்ள பிரம்மபுரீசுவரர் ஆலயத்துள் பெரிய சந்நிதியில் ஐராவத விநாயகர் உள்ளார். மூல முழுமுதற் கடவுளாகக் கொண்டாடப்படும் விநாயகர் சிவன் கோயில்களில் முதன்மைப் பரிவார தெய்வமாகப் பல இடங்களில் எழுந் தருளியுள்ளார். அவர் எழுந்தருளி யுள்ள இடங்களுக்கேற்ப அவர் சிறப்புப் பெயர்கள் பெறுகிறார்.

கோபுரக் கணபதி

ஒவ்வொரு கோபுர வாயிலிலும் கணபதிக்குத் தனிச்சந்நிதி அமைக் கப்படுகிறது. அவரைக் கோபுரக் கணபதி என்று கூறுவர். அவ்வாறு இல்லாதபோது கோபுர கோஷ்டத்திலும் இவரை அமைப்பர். இவரை வணங்கிய பிறகே, அன்பர் கள் ஆலய தரிசனத்தைத் தொடங்குவர். சில ஆலயங்களில் கோபுரக் குடைவரை எனப்படும் கோபுரத்தின் உட்புறம் அமைந்த மேடைகளிலும் விநாயகரைக் காணலாம். இவரைக் குடைவரைப் பிள்ளையார் என்பர். ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயத்தில் கோபுரக் குடைவரையில் "கலங்காமல் காத்த விநாயகர்' என்ற பெயரில் குடைவரைப் பிள்ளையார் வீற்றிருக்கிறார்.

எதிர்கொள் கணபதி

சில ஆலயங்களில் இறைவன் கிழக்கு நோக்கியிருக்க ராஜ கோபுரம் அல்லது தலைவாயில் தெற்கு நோக்கி இருக்கும். இத்தகைய கோயில்களில் கோயிலுக்குள் நுழைந்ததும் வழிபடத் தக்க வகையில் உள்மதில் ஓரமாக வாயிலை நோக்கியவாறு ஒரு கணபதியைச் சிறிய சந்நிதியில் எழுந்தருள வைத்துள்ளனர். இவரை எதிர்கொள் கணபதி என்பர்.

மேற்கு நோக்கிய திருமயிலை கபாலீசுவரர் ஆலயத்தில் கிழக்கு வாயிலுக்கு நேராகவுள்ள நர்த்தன கணபதி, திருமழிசை ஒத்தாண் டேசுவரர் ஆலயத்தின் தேவராஜகணபதி, திருமுல்லைவாயில் மாசிலாமணீசுவரர் ஆலயத்தின் முல்லைவன கணபதி முதலான கணபதியர் எதிர்கொள் கணபதியராக விளங்குகின்றனர்.

கம்பத்தடி கணபத

கோயிலில் நுழைந்ததும் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவை உள்ளன. கொடிமரத்திற்கு முன்பாகவோ, அவற்றின் பீடத்தின் அடியிலோ சிறிய மாடத்துள் இருப்பவரைக் கொடிமரக் கணபதி என்றும், கம்பத்தடி கணபதி என்றும் கூறுவர். திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி ஆலயத்தில் கொடிமரக் கணபதியாகப் படித்துறை விநாயகர் அமைந்துள்ளார். இந்த ஆலயம் செப்பு ஓடு வேய்ந்து மூன்று கலசங்களுடன் அழகிய சபையாக உள்ளது.

தனிச் சந்நிதியாக அமைக்க முடியாதபோது பலிபீடத்தின் கிழக்கு அடிப்பட்டைப் பகுதியில் சிறிய மாடம் அமைத்து அங்கு விநாயகரை அமைப்பர். இப்படிச் சிறிய மாடத்துள் இருந்தாலும் பெரும் புகழ் பெற்ற விநாயகரைப் பல இடங்களில் காணலாம். திருவலஞ்சுழியில் மூலஸ்தானத்தில் கடல் நுரையால் ஆன வடிவில் விநாயகர் ஸ்வேத (வெள்ளை) விநாயகர் என்ற பெயரில் விளங்குகிறார். பலிபீடத்தில் அமைக்கப்பட்டுள்ள கணபதிக்குச் சிறப்பளித்து முகமண்டபம், மகாமண்டபம் முதலியவற்றை அமைத்துத் தனி ஆலயமாக ஆக்கியுள்ளனர். இவருக்குக் கொடியேற்றி விழா நடத்துகின்றனர்.

பலிபீடத்திற்கு முன்பாக அமையும் கணபதிக்குச் "சங்கல்ப கணபதி' என்று பெயர். முன்னாளில் இவருக்கு முன்பாகச் சங்கல்பம் செய்து கொண்டு, அன்றைய பஞ்சாங்கத்தைப் படித்த பின்னரே ஆலயத்தில் பூசைகளை மேற்கொள்வர்.

கன்னிமூலை கணபதி

பிராகாரங்களில் கன்னிமூலை எனப்படும் தென்மேற்குமுனை யில் விநாயகர் சந்நிதி அமைப்பது வழக்கம். அனைத்துப் பிராகாரங்களிலும் கன்னிமூலையில் கணபதி ஆலயம்

அமைகிறது. என்றாலும், முதல் பிராகாரத்தில் அமையும் கன்னி மூலை கணபதியே பிரதான கணபதி யாகப் போற்றப்படுகிறார். இவரைத் "தல விநாயகர்' என்று கொண் டாடுகின்றனர். சபரிமலையில் கன்னிமூலை கணபதி மிகவும் விசேஷமானவர்.

துவார கணபதி

ஆலயத்தின் ஒவ்வொரு வாயிலி லும் வலப்புறம் விநாயகரும் இடப்புறம் முருகனும் அமைக்கப் படுகின்றனர். இவர்களை முறையே துவார கணபதி, துவார சுப்பிரமணி யர் என்று அழைப்பர்.

தத்துவவாதிகள் இவர்களை உலக உற்பத்திக்கு ஆதாரமான பிந்து நாதங்களின் வடிவம் என்கின்றனர். மேலும், விநாயகர் கல்யாண கணபதி, ஸ்தம்பமுகூர்த்த (பந்தக் கால்) கணபதி, நந்தவனப் பிள்ளை யார், வசந்த மண்டப கணபதி, தேரடி மண்டப கணபதி, குளக்கரை படித் துறை கணபதி என்று பல்வேறு பெயர்களில் ஆலயத்தில் பல இடங் களில் வீற்றிருந்து அருள்புரிகிறார்.

ஸ்ரீவிமானத்து கணபதி

ஸ்ரீவிமானத்தில் அமையும் பஞ்ச கோட்டங்களில் தென்கிழக்கு முனையில் அமைந்துள்ள கோட்டத் தில் நர்த்தன விநாயகரைக் காண லாம். இவர் கோஷ்ட கணபதி. சில விமானங்களில் மேற்பகுதி யில் விநாயகரை அமைத்துள்ளனர். மயிலாடுதுறை மயூரநாத சுவாமி ஆலயத்தில் ஸ்ரீவிமானத்தின் அரு கில் சிறிய சந்நிதியில் ஸ்ரீவிமான கணபதி எழுந்தருளியுள்ளார். அகத்தியர் மணலைத் திரட்டி இவரது திருமேனியை அமைத்து வழிபட் டார் என்று தலபுராணம் கூறுகிறது

பிரளயம் காத்த விநாயகர்

திருப்புறம்பியம் காசிநாதர் ஆலயத்தில் "பிரளயம் காத்த விநாயகர்' எழுந்தருளியுள்ளார். விநாயகர் சிவபெருமானைப் பூசித்த தலங்க ளில் அவர் வடக்கு நோக்கியவாறு எழுந்தருளியுள் ளார். திருவிடைமருதூர், பிள்ளையார்பட்டி முதலிய தலங்களில் அவர் வடக்கு நோக்கி அமர்ந்து சிவ பூசை செய்து கொண்டிருப்பவராக உள்ளார்.

வெல்லப் பிள்ளையார்

மஞ்சள் பிள்ளையார், மண் பிள்ளையார் என்று செய்யப்படும் பொருள்களால் பிள்ளையார் அழைக் கப்படுவதைப் போல, செல்லப் பிள்ளையாரான அவர் வெல்லப் பிள்ளையாராகவும் விளங்குகிறார். வெல்லத்தைப் பிடித்து வைத்து அதில் பிள்ளை யாரை நிலைப்படுத்தி வணங்கும் வழக்கம் நெடுங் காலமாக இருந்து வருகிறது. அச்சு வெல்லக்கட்டி களையும் பிள்ளையாராக வைத்து வழிபடுவர்.

விநாயகர் கருப்பஞ்சாற்றுக் கடல் நடுவேயுள்ள ஆனந்த பவனத்தில் வசித்து வருகிறார். கருப்பஞ் சாறு திரண்டெழுந்த கட்டியாக அவர் விளங்குகி றார். அதைக் குறிப்பதாக ஆனந்த கணபதியாக வெல்லப்பிள்ளையாரை வழிபடுகின்றனர் என்பர். "வெல்லப் பிள்ளையாரைக் கிள்ளி அவருக்கே நிவேதனம் செய்தது போல' என்பர்.

ஒருவன் வெல்லத்தால் பிள்ளையாரைச் செய்து வழிபட் டான். பூசையின் முடிவில் நிவேதனம் செய்ய எது வும் இல்லாததால் பிள்ளையாராகப் பிடித்த வெல் லத்தைச் சிறிது கிள்ளி நிவேதனம் செய்தானாம். ஒருவனுக்குரிய பொருளை எடுத்து அவனுக்கே கொடுத்து அவனை மகிழ்வடையச் செய்வதைக் குறிக்க இந்தப் பழமொழி வழங்குகிறது.

திருவாவடுதுறை ஆதீனத்தில் 20வது குரு மகா சன்னிதானமாக வீற்றிருந்தவர் மேலகரம் சுப்பிரமணிய தேசிகர். இவரது ஆட்சிக் காலத்தில் ஒரு சிவராத்திரிக்கு முன்பாக திருமடத்திற்கு அவ ரைக் காண வந்த குடியானவர் ஒருவர் வெல்லத் தாலான பிள்ளையாரைக் கொண்டு வந்தார். அந்த வடிவம் மிக அழகாக அமைந்திருந்தது.

குரு மகா சந்நிதானம் விநாயகரைக் கண்டு மகிழ்ந் தார். பிறகு தம்மைக் காண வந்த தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதஐயருக்கு அதை அளித்தார். அந்த ஆண்டில் சிவராத்திரியன்று ஐயரவர்கள் அந்த வெல்லப் பிள்ளையாருக்குப் பூஜை செய்து மகிழ்ந்தார். இந்த நிகழ்ச்சியை ஐயரவர்கள் "என் சரித்திரம்' என்ற நூலில் குறித்துள்ளார். பூஜைக்குப் பின் வெல்லப்பிள்ளையார் உரு வைப் பாயசத்துள் இடுவர். அவர் அதில் கரைந்து நம்முள் நிறைந்து மகிழ்ச்சியைத் தருவார்.

நன்றி ; பூசை.ச.அருணவசந்தன் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

நோனியின் மருத்துவ குணம்

மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி. மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...