பயங்கரவாதத்துக்கு எதிரானபோரில்அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட உறுதி ஏற்கவேண்டும் என பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கருத்து தெரிவித்துள்ளார்.
அதே சமயம் தேசபாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசு சரியாக நடந்துகொள்ளவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் இது குறித்து மேலும் அவர் பேசியதாவது;
ஐதராபாத்தில் நிகழ்ந்துள்ள குண்டு வெடிப்புகள் தீவிரவாதத்துக்கு எதிராக அரசியல் கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து ஒருங்கிணைந்து செயல்படவேண்டும். மதத்தின் பெயரினால் நாட்டு மக்களை துண்டாட நினைக்கும் தீவிரவாதிகள் நம் எதிரிகள். இந்தியாவை பலவீனப் படுத்த வேண்டும். அதன் நிலைத் தன்மையை குலைக்கவேண்டும் என்பதுதான் பயங்கரவாதிகளின் நோக்கம் .
ஐதராபாத்தில் நிகழ்ந்துள்ள குண்டு வெடிப்புக்கு பிறகும் அதை வைத்து அரசியல் ஆதாயம்தேடும் வகையில்தான் உள்துறை அமைச்சர் ஷிண்டே பேசிவருகிறார். உளவுத் துறை தகவல்கிடைத்தும் கடந்த 21 ம் தேதி தாக்குதலை தடுக்க கிரண்குமார்ரெட்டி முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளவில்லை . மேலும் கண்காணிப்பு கேமிராக்களில் சில செயல்படாமல் இருக்கிறது . இது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் வெங்கையாநாயுடு தெரிவித்தார்.
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.