அடல்ஜி ஒருவர்தான் அனைவரையும்விட தலை சிறந்து நிற்கிறார்

 அடல்ஜி ஒருவர்தான் அனைவரையும்விட தலை சிறந்து நிற்கிறார் சுதந்திர இந்தியா தனது 66 ஆண்டுகால சரித்திரத்தில் இதுவரை 14 பிரதமர்களை கண்டிருக்கிறது. அவர்களில் ஆறு பேர் ஒரு வருட்த்திற்கும் குறைந்தே ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். மீதமுள்ள எட்டு பேரில் இருவர் , ஒவ்வொருவரும் 15 வருடங்களுக்கும் மேலாக ஆட்சி

செய்தனர். அவர்கள் பண்டித நேருவும் ( 17 வருடங்கள்) திருமதி இந்திரா காந்தியுமாவார். ( 16 வருடங்கள்). நான்கு பிரதமர்களின் ஆட்சிக் காலம் ஐந்து அல்லது அதற்கும் மேல் நீடித்திருக்கிறது. அவர்கள் டாக்டர் மன்மோகன் சிங் ( 9 வருடம்) , ஸ்ரீ அடல் பிஹாரி வாஜபேயீ ( 6) , ஸ்ரீ பி வி நரசிம்ம ராவ் மற்றும் ஸ்ரீ ராஜீவ் காந்தி ( 5 வருடம் ). ஸ்ரீ மொரார்ஜி தேசாய் இந்நாட்டை 21/2 ஆண்டு காலம் ஆட்சி செய்தார்.

ஸ்ரீ லால் பஹாதுர் சாஸ்திரியின் ஆட்சி துரதிர்ஷ்ட வசமாக டாஷ்கென்டில் 11/2 ஆண்டுகளில் முடிந்து விட்ட்து. ஆறு பிரதம மந்திரிகளின் ஆட்சி ஒரு வருட்த்திற்கும் குறைவான காலமே நீடித்த்து. அவர்கள் : வி பி சிங், ஐ கே குஜ்ரால் , ஹெச் டி தேவே கெளடா ( ஒவ்வொருவரும் 11 மாதங்கள் ); சந்திரசேகர் ( 8 மாதங்கள் ),சரண் சிங் ( 6 மதங்கள் ) மற்றும் குல்ஜாரிலால் நந்தா ( 1 மாதம் )

அதிக ஆண்டுகாலம் ஆட்சி செய்த இரு பிரதம மந்திரிகளுமே மக்கள் மனதில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர். என்பது இயற்கையே. ஆயினும், இருவரின் ஆட்சியையும் பற்றிய ஐந்தொகைக் குறிப்பு எடுத்துப் பார்த்தால்,இறுதியில் எஞ்சி நிற்பது மனதிற்கு திருப்தி அளிப்பதாயில்லை.

பண்டித நேருவைப் பொறுத்த வரையில், பெரும்பாலான மாநில காங்கிரஸ் கட்சிகள் சர்தார் வல்லபாய் படேலையே விரும்பினாலும், அவர் சுதந்திர இந்தியாவின் முதல் அரசாங்கத்தைத் தலைமையேற்று நடத்த மகாத்ம காந்தியாலேயே தேர்ந்தெடுக்க பட்டவராவார் . நேரு சீனாவின் மீது வைத்த தவறான நம்பிக்கையும், தயார் நிலையில் இருக்க வேண்டிய நாட்டின் பதுகாப்பைப் புறக்கணித்த அவரது பாதுகாப்பு அமைச்சரின் குற்றமுமே நேருவின் சாதனைகளையெல்லாம் புறந்தள்ளின.
பண்டித நேருவின் அயல் நாட்டு மற்றும் பாதுகப்பு கொள்கைகளினால் .நம் நாடு சீனாவிடம் 1962-ல் மிக மோசமான தோல்வியைச் சந்தித்த்து. அந்த இழிவு எக்காலத்திலும் மறக்க்க்கூடியது அல்ல.

ஸ்ரீமதி இந்திரா காந்தியின் குறிப்பிடதக்க சாதனை என்பது, 1971-ல் பாகிஸ்தானை வென்றதும் புதிய சுதந்திர நாடாக வங்க தேசம் உருவானதும்தான். ஆனால், ஸ்ரீமதி இந்திரா காந்தி ஆட்சியில் இருந்த போது, அலஹாபத் உயர் நீதி மன்றம் 1975-ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் அவரது வெற்றி செல்லாது என்றும், அவர் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு எந்த் தேர்தலிலும் நிறக் கூடாதென்றும் தீர்ப்பளித்த. உடனே , அப்போதைய காங்கிரஸ் ஆட்சி மிக கொடுமையான அவசர  நிலையை நாட்டின் மீது திணித்து. மக்களின் அடிப்படை உரிமைகளை முடக்கியது ; ஒரு லக்ஷம் பேர்களுக்கும் மேலாக எதிர்ப்பாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்; ஜனநாயகமே அழியும் நிலை உருவானது.

இந்த அவசர நிலையை எதிர்த்த லோகநாயக் ஜெயப்ரகாஷ் நாராயண் அவர்களின் எழுச்சி மிகு தலைமையும் , காங்கிரஸின் மீது இந்திய வாக்காளர்களுக்கு பொங்கிய ஆத்திரமுமே, 1977-ல் நடபெற்ற லோக் சபா தேர்தலில் காங்கிரஸ் புறக்கணிக்கப் பட்டது. இவையிரண்டுமேதான் இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்றின. இந்தியாவைப் அமைதி நிலைமைக்குக் கொண்டு வந்தது மட்டுமின்றி, ,அவசர நிலையைப் பற்றி அரசியல் நிர்ணய சட்டம் அளிக்கும் வசதிகளை தம் சொந்த நலனுக்காக குறுகிய நோக்கத்துடன் இனி எக்காலத்தும் மனதில் கூட நினைக்காதீர்கள் என்று அரசியல் தலைவர்களுக்கும் எச்சரிக்கை இவை விடுத்தன.

மாறாக, அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த இவ்விரு பிரதமர்களுடன் ஒப்பிடும்போது சாஸ்திரி மற்றும் தேசாய் முதலியோரின் ஆட்சிக் காலங்கள் மிகக் குறுகியவை. இருப்பினும், அவர்களது நேர்மை, கண்ணியம் மற்றும் 'இயல்புளிக் கோலோச்சி' அதாவது மனச்சாட்சிக்குக் கட்டுப்பட்டு நடந்தது இவையெல்லாம் மக்கள் மனதில் ஆழமாகப்  பதிந்து, அவர்களிடம் அவ்விரு பிரதமர்களுக்கும் நிலையான மரியாதையைப் பெற்றுத் தந்தன.

 1951-ல் டாக்டர் ஷ்யாமா ப்ரசாத் முகர்ஜி , பாரதிய ஜன சங் என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார். டாக்டர் முகர்ஜியின் தனிப் பண்புகள், மற்றும் அவரது புதுக் கட்சியின் கொள்கைகள், திட்டங்கள் , முன்னதாக ஆர் எஸ் எஸ் அமைப்பில் இருந்து பண்பட்ட நூற்றுக் கணக்கான இளைஞர்களை ஈர்த்தன. தீனதயாள் உபாத்யாயா, நானாஜி தேஷ்முக், அடல் பிஹாரி வாஜபேயீ, குஷாபாவ் டாக்ரே , சுந்தர் சிங் பண்டாரி, ஜகன்நாத் ராவ் ஜோஷி, பரமேச்வரன், டாக். பல்தேவ் ப்ரகாஷ் மற்றும் மல்கானி போன்ற பிரபலமான அறிஞர்கள் பலர் அவர்களில் இருந்தவர்கள்.

என்னுடைய அரசியல் வாழ்வும் 1951-ல் தான் ஆரம்பித்தது. ஆகவே, 1952-ல் நடந்த முதல் பொதுத் தேர்தலிலிருந்து இதுவரை ந்டைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் நான் வேட்பாளன், அல்லது பிரசாரகன் என்ற எதோ ஒரு வகையில் பங்கெடுத்துக் கொண்டவன் என்ற பெருமை பெற்றவன்

எங்கள் கட்சியின் மூத்த கொள்கையாளர் தீனதயாள்ஜியுடனும் , எங்கள் கட்சியி பெற்றுத் தந்த மிகச் சிறந்த தலைவரான அடல்ஜியுடனும், மற்றும் எவ்வாறு தீவிர அரசியல் ஈடுபாட்டையும் ஆக்கபூர்வமான திட்டங்களையும் பயனுற இணைத்து கிராமப்புற மக்களினிடையே கொண்டு செல்ல வேண்டும் என்று செயல்படுத்திக் காட்டிய நானாஜி தேஷ்முக் போன்றோருடன் நான் நெருங்கி உழைத்த வாய்ப்பை எனக்குக் கிடைத்த ஒரு தனிப் பெரும் பேறாக நினைக்கிறேன்.

ஐந்து வருடங்களுக்கும் மேலாக ஆட்சி செய்த நான்கு பிரதமர்க்ளுள். டாக்டர் . மன்மோஹன் சிங் , கடந்த ஒன்பது வருடங்களாக பிரதமராக இருந்து வருகிறார்.திட்டமிட்டபடி வரும் 2014-ல் லோக் சபா தேர்தல்கள் நிகழ்ந்தால், அவர் 10 வருடங்களை முடித்து விடுவார்.அது நடந்தால், நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் செய்த தனிப்பட்ட சாதனை என்றே கூறலாம். அதே சமயம், இதை விட தனித்துவமான, போலியான சாதனை , சுதந்திர இந்தியாவின் அரசியல் சரித்திரத்தில்,.லோக் சபாவுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமலே இந்த உயர் பதவியை வகித்த ஒரே பிரதமர் அவர் தான் என்பது தான். .

சென்ற 2009-, இந்த நாடு சந்தித்த வலிமையற்ற பிரதமர் டாக் மன்மோஹன் சிங் தான் என்று கூறியபோது, எனது சக அரசியலாளர்கள் நான் மிகவும் அவர் மீது மிகக் கடுமையாக இருந்தேன் என்றனர். ஆனல், நான் இன்னமும் அதே கருத்தைத்தான் கொண்டுள்ளேன். அவரது இந்த பலவீனம் என்கிற குணாதிசயம் தான் அவரை 10, ஜன்பத்திற்கு அடிமையாக ஆக்கி, அதனால் நாட்டின் பிரதம மந்திரி என்னும் இவ்வுயர் பதவி கொண்டுள்ள முழு அதிகாரத்தையும் பயன்படுத்த முடியாமல் வைத்திருக்கிறது.

தனிப்பட்ட முறையில் அவர் நேர்மையாளராக இருக்கலாம் ; ஆனால், இக்குறைபாட்டாலேயே , சுதந்திர இந்தியாவில் பத்து ஆண்டுகளாகத் தலைமையேற்று வந்த அவரது ஆட்சிதான் மிகவும் ஊழலான அரசு என்று சரித்திரம் பதிவு செய்யும் . இது, வெறும் ஊடகங்களின் அறிக்கைகள் மூலமல்ல, பல நீதிமன்றத் தீர்ப்புகளினாலும், தலைமைத் தணிக்கை மற்றும் கட்டுப்பாட்டாளர் அளித்திருக்கும் கணக்கற்ற அறிக்கைகளாலும் உறுதி செய்ய முடியும்.

இந்த வலைப்பூவில் முன்னரே குறிந்தபடி, என்னுடைய அரசியல் வாழ்வில், அடல்ஜியின் நெருங்கின தோழன் என்று இருந்ததை நான் மிகவும் பேறாகக் கருதுகிறேன். அடல்ஜியின் ஆறு வருட ஆட்சியை எந்த அரசியல் ஆய்வாளாராவது நடுநிலையிலிருந்து அலசிப்பார்த்து, மதிப்பிடுவாரேயானால், 1998 முதல் 2004 வரை இருந்த தேசிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சி சாதனைகள் மிகுந்தது, நெறிமுறைகளுக்கு மாறாக எதுவும் நடந்தது என்று கூற முடியாது இருந்தது என்றே சொல்வார் என்று நான் திடமாக நம்புகிறேன். இருதியாக, சுருக்கமாக கூறப் போமானால்,இவ்வாட்சிக் காலத்தின் சிறப்பு அம்சங்கள் இவை :

1. பிரதமராக அடல்ஜி ஆன சில மாதங்களிலேயே, இந்தியா ஒரு அணு ஆயுத நாடாக மாறியது.
2. பொருளாதாரத்தில், இவ்வாட்சி, உட்கட்டுமானத்தில் – பெருவழிச் சாலைகள், கிராமப்புறச் சாலைகள், நீர்ப்பாசனம், மின்சாரம்- அதிக கவனம் செலுத்தியது.
3.கணினி மென்பொருளியலில் இந்தியாவை ஒரு வல்லரசாக மாற்றியது
4. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் நம் மீது இருந்த போதும், சுதந்திர இந்தியாவில் மிக மோசமான நில நடுக்கம் கட்சில் ஏற்பட்ட போதும், என் டி ஏ வின் ஆறு ஆண்டு ஆட்சியில் ,அடல்ஜி பணவீக்கத்தை வெற்றிகரமாகக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
5. அவ்வாறாண்டுக் காலம் , நல்லாட்சி,வளர்ச்சி மற்றும் கூட்டணி அறத்திற்கு ஒரு முன்மாதிரியாக இருந்தது.
6.அரசுக்கு எதிராக ஊழலைப் பற்றிய முணுமுணுப்பு கூட இல்லை.
7. ஒரு மந்திரியை நியமித்து அவரது தலைமையின் கீழ் ஒரு தனிப்பட்ட பணிக்குழு அமைத்து, நாட்டின் நதிகளையெல்லாம் இணைக்கும் அடிப்படைத் திட்டங்களைத் தயாரித்தது.

இம்மாதிரியான மிகச் சிறந்த சாதனைகள் செய்த போதும் , அடல்ஜியிடம் அகந்தயோ  அல்லது செருக்கின் சுவடையோ ஒரு சிறிதும் இல்லாததே அனைவரும் அவரிடம் கண்ட தலைசிறந்த குணவியல்பு என்று நான் கருதுகிறேன். ஆகையால், 1947-லிருந்து அனைத்து பிரமர்களின் ஐந்தொகைக் குறிப்பையும் நோக்கும்போது, அடல்ஜி ஒருவர்தான் அனைவரையும்விட தலை சிறந்து நிற்கிறார் என்றே நான் கூறவியலும்.

நன்றி ; எல்.கே. அத்வானி

நன்றி தமிழில்; ராஜகோபாலன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஸ்டிக்கர் ஒட்டும் கனிமொழி

ஸ்டிக்கர் ஒட்டும் கனிமொழி குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் மத்தியஅரசின் திட்டத்துக்கு, கனிமொழி ...

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… ம ...

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… மொத்த செலவும் மத்திய அரசே உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்தமாதம் ராமர் கோயில் திறக்கப்பட்டது. ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்க ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்கள் வலியை ஏற்படுத்துகிறது இந்தியாவை வளர்ந்த நாடாக்க பிரதமர் மோடி சபதம் ஏற்றுள்ளார். ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம்.  கட்சியே வாரிசுகள் கையில் இருப்பது ஆபத்து லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங்களில் வசிக்க மாட்டார் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் வணக்கத்திற்குரிய ...

பாகுபாடு, திருப்தி படுத்தும், அ ...

பாகுபாடு,  திருப்தி படுத்தும், அரசியல் பிரச்சனைகளை வளர்த்தது நம்பாரதம் 1,500 ஆண்டுகளாக அன்னியரை எதிர்த்து போராடியது வரலாறு. ...

மருத்துவ செய்திகள்

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

அவக்கேடோவின் மருத்துவக் குணம்

ஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் அறியப்படும். இப்பழம் ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...