கர்நாடக தோல்வி தனக்கு அதிர்ச்சி தரவில்லை ஒருவேளை ஜெயித்திருந்தால்தான் எனக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கும் என பாஜக மூத்த தலைவர் அத்வானி கருத்து தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது ; கர்நாடகத்தில் பா.ஜ.க., தோல்வி அடைந்ததற்காக வருத்தப் படுகிறேன். ஆனால் ஆச்சரிய படவில்லை, அதிர்ச்சியடையவில்லை. ஒருவேளை ஜெயித்திருந்தால் தான் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்திருப்பேன்.
கர்நாடக தேர்தல்முடிவுகள் பாஜகவுக்கு நல்லபாடம். ஒருவகையில் இது காங்கிரஸுக்கும்கூட பாடம்தான். சாதாரணமாக மக்களை கருதக்கூடாது என்பது பா.ஜ.க., மற்றும் காங்கிரஸுக்கு இந்த தேர்தல்முடிவு தந்துள்ள பொதுவான பாடமாகும். மக்கள் மிகவும் முக்கியமான வர்கள், மதிப்பு மிக்கவர்கள் என கூறியுள்ளார் அத்வானி
ஒழுங்கான உடற்பயிற்சியாலும் ஆரோக்கியமான உணவு முறையாலும் கிடைக்கும் நன்மைகள் • சிறந்த ஆரோக்கியம் • பார்ப்பதற்கும், உணர்வதற்கும் |
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
Leave a Reply
You must be logged in to post a comment.