விரக்தியின் வெளிப்பாடாகவே ராகுல்காந்தியின் பேச்சு அமைந்துள்ளது. பாஜக பிரதமர்வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோடியின் செல்வாக்கு வளர்ந்துவருவதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. என பா.ஜ.க கருத்து தெரிவித்துள்ளது.
ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி, “எனது பாட்டி, தந்தையைப் போல நானும் கொல்லப்படலாம்’ என்று பேசினார். அத்துடன் பாஜக பிரிவினைவாத அரசியலில் ஈடுபட்டுவருகிறது என்றும் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான வெங்கய்ய நாயுடு ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விரக்தியின் வெளிப்பாடாகவே ராகுல்பேச்சு அமைந்துள்ளது. பாஜக பிரதமர்வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோடியின் செல்வாக்கு வளர்ந்துவருவதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அதனால், இது போன்று உணர்வு பூர்வாகப் பேசுவதுடன் பொய்யான தகவல்களையும் பரப்பி வருகின்றனர்.
கடந்தகால நிகழ்வுகளை பேசுவதன் மூலம் அனுதாபத்தை திரட்டும்முயற்சியே இது. அவர்களது தோல்விகளுக்கு அவர்களிடம் எந்தவிளக்கமும் இல்லை. பா.ஜ.க.,வின் வளர்ச்சியை சந்திக்கும்திறன் காங்கிரஸிடம் இல்லை. அதற்கும்மேல், வலுவான, துடிப்புமிக்க தலைமை இல்லை. அதனால் தான், இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோர் கொல்லப்பட்டனர் என்பதைக் கூறி அனுதாபம் பெற முயற்சிக்கின்றனர்.
பிரிவினைவாத, வகுப்புவாத சூழ்நிலை அதிகரிப்பதாக ராகுல்கூறுகிறார். இதற்குகாரணம் யார்? தீவிரவாதம் வளர்ந்ததற்குகாரணம் யார்? சந்தேகமில்லாமல் காங்கிரஸ்தான். தேசவிரோத சக்திகளிடம் மென்மையான அணுகுமுறையை கடைப்பிடித்தது காங்கிரஸ். அகாலிகளை வலுவிழக்கச்செய்ய பிந்தரன் வாலேவை ஊக்குவித்தது காங்கிரஸ்.
முஸ்லிம்லீகுடன் கைகோத்தது. ஒவைஸி, ஷகா புதீனுடன் நட்புறவுகொண்டது. வகுப்புவாத அரசியலை ஊக்குவித்ததே காங்கிரஸ்கட்சிதான். இலங்கைக்கு இந்திய அமைதிப்படையை அனுப்பியதன் மூலம் இந்திய வீரர்களின் இறப்புக்கும் காங்கிரஸ்தான் காரணமானது.
வகுப்புவாத தடுப்பு மசோதாவை கொண்டுவர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. சிறுபான்மையினரை தங்கள்பக்கம் கொண்டுவருவதற்கான முயற்சியே இது. சிறுபான்மையினரின் முன்னேற்றத்துக்காக காங்கிரஸ் எதுவும்செய்யவில்லை என்பதையே ரங்கனாத்மிஸ்ரா, சச்சார் கமிட்டியின் பரிந்துரைகள் படம்பிடித்துக் காட்டுகின்றன.
அப்பாவி முஸ்லிம்கள் தண்டிக்கப்படக்கூடாது என மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே அண்மையில் மாநிலஅரசுகளுக்கு கடிதம் எழுதினார். இதுவும் சிறுபான்மையினரை தங்கள்பக்கம் இழுப்பதற்கான நடவடிக்கையே.
இந்த எல்லாமுயற்சிகளும் சிறுபான்மையினரின் முன்னேற்றத்துக்கானது அல்ல. தாற்காலிகமாக அவர்களை தங்கள்பக்கம் இழுத்து வாக்குகளை பெறுவதற்காகவே. இதுதான் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கானவழியா?
1967 முதல் நாட்டில் நடந்த கலவரங்களில், – 2002 குஜராத்கலவரம் உள்பட – பா.ஜ.க ஆட்சியை விட, காங்கிரஸ் ஆட்சியில் தான் அதிகபட்சம்பேர் இறந்திருக்கிறார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன என்றார் வெங்கய்யநாயுடு.
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
Leave a Reply
You must be logged in to post a comment.