சர்தார் வல்லபபாய்படேல் சிலை அமைப்பு குழுவின் தமிழக அமைப்பாளராக பா.ஜ.க மாநிலச்செயலாளர் வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் நர்மதை ஆற்றங் கரையில் முன்னாள் துணைபிரதமர் வல்லபபாய் படேலுக்கு 182 மீட்டர் உயர இரும்புச்சிலை அமைக்கப்படவுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டுவிழா படேலின் பிறந்ததினமான வியாழக்கிழமை (அக். 31) நடைபெற்றது. இந்த சிலை அமைக்க தேவையான 700டன் இரும்பை நாடுமுழுவதும் விவசாயிகளிடம் இருந்து திரட்ட குஜராத் அரசு முடிவுசெய்துள்ளது. இதற்காக மாநிலம் மற்றும் மாவட்டம் வாரியாக குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.
நாடுமுழுவதும் கிராமங்களில் விவசாயிகள் பயன்படுத்திய இரும்பு உபகரணங்களை திரட்டும்பணியில் இக்குழுவினர் ஈடுபடுவார்கள்.
சிலையுடன் அமைக்கப்படவுள்ள கண்காட்சி அரங்கில் நாடுமுழுவதும் அனைத்து கிராமங்களில் இருந்து மண்எடுக்கப்பட்டு கிராமத்தின் பெயருடன் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. நாடுமுழுவதும் கிராம மக்களின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு அதன்கலவையும், சுமார் 2 கோடி மக்களின் கையெழுத்தும் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது.
இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள், பேரணிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான தமிழககுழுவின் அமைப்பாளராக பா.ஜ.க மாநிலச் செயலாளர் வானதிசீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ... |
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.