ஊழல் புகரில் சிக்கிய காங்கிரஸ் தலைவர்களை ஆம் ஆத்மி பாதுகாத்துவருவதாக டெல்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஹர்ஷ் வர்தன் குற்றம் சுமத்தியுள்ளார் .
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஷீலா தீக்சித் ஆட்சியின்போது ஊழலில் ஈடுபட்ட அமைச்சர்களையும், அரசு அதிகாரிகளையும் சிறைக்கு அனுப்பப்போவதாக ஆம் ஆத்மி கூறியதை நினைவு கூர்ந்துள்ளார்.
பேரவைத் தலைவர் தேர்தலின் போது முதலமைச்சர் கெஜ்ரிவால் சட்டப் பேரவையில் இருந்து வெளியேறியது அவைமரபுகளை மீறும்செயலாகும் . பேரவை கூட்டத்தின் முதல் நாளன்று ஆம் ஆத்மி உறுப்பினர்கள், தங்கள்கட்சியின் தொப்பியை அணிந்து வந்தது அவையை அவமதிக்கும்செயலாகும் . ஊழல் அரசியல் வாதிகளை தண்டிப்பதாக தேர்தலின் போது வாக்குறுதி அளித்த கெஜ்ரிவால், ஆட்சியை காப்பாற்ற காங்கிரசுடன் சமரசம் செய்து கொண்டு விட்டாரா? என்றும் ஹர்ஷ்வர்தன் கேள்வி எழுப்பினார்
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |
இதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, கார்ப்பு உடையது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.