முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்டோரின் தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்துசெய்து பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். இதில் காலதாமதமாக முடிவு எடுத்ததால் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் 3 பேர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் ராம் ஜெத்மலானி, யுக்முத் சவுத்திரி ஆகியோர் ஆஜராகி வாதாடினார்கள்.
மத்திய அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர்ஜெனரல் சித்தார் லூத்ரா வாதாடினார். இரு தரப்பு வாதமும் முடிவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நாடுமுழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் தூக்குத்தண்டனையை ரத்துசெய்து உத்தரவிட்டது. மேலும், அவர்களின் தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்தும் உத்தரவிட்டது.
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.