பன்னிரண்டு வருட கடும் தவத்தினால் பெற்ற வளர்ச்சி என்ற வரமே மோடி அலை

 மோடி அலை 12 வருடம் குஜராத்தில் மையம் கொண்டிருந்த அலை, தொடர்ந்து நான்கு முறை குஜராத் மக்களால் அங்கிகரிக்கப்பட்ட அலை, குஜராத்திலிருந்து வெளிப்பட்டு இந்தியாவெங்கும் பல்கிப் பெருகி பரவி ஒவ்வொரு இந்தியனின் மனத்திலும் எதிர்கால இந்தியா குறித்த நம்பிக்கையை ஏற்ப்படுத்தி விட்ட அலை , இந்தியாவையும் தாண்டி குஜராத்தின் வளர்ச்சி குறித்து சர்வ தேச ஊடகங்களை பேச வைத்த எழுதவைத்த அலை. மோடி அலை .

இப்படிப்பட்ட அலை இல்லவே இல்லை , தன் கண்ணுக்கு தெரியவே இல்லை என்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். இவருக்கு எதுதான் தெரிந்தது , எதைத்தான் இவர் ஒப்புக்கொண்டர். இப்படித்தான் 1.76 லட்சம் மதிப்பிலான 2G ஊழலை இல்லை என்றார், 10 லட்சம் மதிப்பிலான நிலக்கரி ஊழலை நடைபெறவே இல்லை என்றார். காமன்வெல்த் ஊழல் இல்லை என்றார் , பவன்குமார் பன்சால் நல்லவர் என்றார். இப்படி எதைத்தான் இவர் ஏற்றுக்கொண்டார், இவர் இல்லை என்று சொன்னதெல்லாம் எதிர்காலத்தில் இருக்கு என்று எதிர்மறையாக மாறியதுதான் வரலாறு, அலைகள் இருக்கிறது என்பதை சொல்லாமல் சொல்கிறாரோ என்னவோ,

அலைகள் நமக்கு, இந்திய அரசியலுக்கு ஒன்றும் புதிதல்ல. 1977இல் இந்திரா காந்தி ஜனநாயகத்தை படுகொலை செய்ததால் காங்கிரஸ் எதிர்ப்பு அலை உண்டானது. 1984இல் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதால் காங்கிரஸ் அனுதாப அலை உண்டானது, 1991 இல் பாதித்தேர்தல் முடிந்த நிலையில் மீதித் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது துரதிர்ஷ்ட்ட வசமாக ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதால் உண்டான இடைக்கால அனுதாப அலையே காங்கிரசை கறை சேர்த்தது, ஆக மொத்தத்தில் உண்டான மூன்று அலைகளில் ஒன்று காங்கிரஸ் எதிர்ப்பு அலை , மற்ற இரண்டு அனுதாப அலை.

ஆனால் மோடி அலையோ திடீர் என உருவானதன்று, அப்பழுக்கற்ற நேர்மை நிறைந்த ஒழுக்கத்துடன் கூடிய பன்னிரண்டு வருட கடும் தவத்தினால் பெற்ற வளர்ச்சி என்ற வரமே மோடி அலை.

இந்திய அரசாங்கத்தின் முக்கிய கோப்புகளையே சோனியாவின் இல்லத்தில் தேடும் மன்மோகன் சிங்கின் கண்களுக்கு இப்படிப்பட்ட மோடி அலை அகப்படவே வாய்ப்புகள் இல்லை .

தமிழ் தாமரை VM வெங்கடேஸ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...