இந்து மதத்தைச்சேர்ந்த பெண்கள் அனைவரும் 'லவ் ஜிகாத்' குறித்து விழிப்புடன் இருக்கவேண்டும் என சிவ சேனைகட்சி தெரிவித்துள்ளது .
சிவசேனை கட்சி தனது அதிகாரப் பூர்வ பத்திரிகையான சாம்னாவில் தலையங்கம் எழுதியுள்ளது.
அதில், "உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமிய தீவிரவாதிகள், இந்தியாவுக்கு எதிராக ஜிகாத் நடத்த திட்டமிட்டுள்ளனர். லஷ்கர்-இதொய்பா, சிமி, அல்காய்தா போன்ற தீவிரவாத அமைப்புகள் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற நினைக்கின்றனர். அதன் ஒருபகுதிதான் 'லவ் ஜிகாத்'. இந்த சதிதான் இந்தியா எங்கும் இப்போது நடந்து வருகிறது.
அதனால் தான் 'லவ் ஜிகாத்' குறித்து விழிப்புடன் இருக்கவேண்டும் என்று நாங்கள் கூறிவருகிறோம். இவை உத்தரப் பிரதேசம், பிஹார் மற்றும் ஜார்கண்ட்டில் அதிகளவில் நடக்கிறது. இதன் காரணமாக அங்குள்ள இந்து மக்கள் கோபத்துடன் இருக்கின்றனர்.
இதனை தடுக்கவே பிரச்சாரம் செய்யப்படுகிறது. அவர்கள், நமது வீட்டுபெண்களை காதல் என்ற பெயரில் முட்டாளாக்கி, பின்னர் பர்கா அணிந்து கொண்டிருக்கும் ஐந்தில் ஒருபெண்களாக மாற்றிவிடுகின்றனர்" என்று அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.