திமுகவின் வெறுப்புப் பேச்சு

திமுக எம்பி. ஆ.ராசா ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில் ‘இந்தியா ஒருதேசமே அல்ல’ என்று பேசியதாகவும், ‘நாங்கள் ராமருக்கு எதிரானவர்கள்’ என்று சுய பிரகடனம் செய்ததாகவும் பாஜக தொழில்நுட்பத் பிரிவு தலைவர் அமித் மாள்வியா கடும் ண்டனம் தெரிவித்துள்ளார். அவருடைய சமூக வலைதளப் பதிவை ஒட்டி பாஜக அமைச்சர்கள்,  பலரும் கண்டனங்களைப் பதிவுசெய்து வருகின்றனர்.

முன்னதாக, சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியது தொடர்பான வழக்கில் நேற்று கருத்துதெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், “உங்கள் கருத்துகளின் விளைவுகள் குறித்து உங்களுக்குத் தெரியாதா? நீங்கள் ஒன்றும் சாமானியர்அல்ல, அமைச்சர். ஓர் அமைச்சராக இருந்து தனது சொற்களில் கவனமாக இருக்கவேண்டும். சொல்லும் கருத்துகளின் விளைவுகளை அறிந்திருக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

இந்நிலையில், அமித் மாள்வியா இன்று (மார்ச் 5) தனது எக்ஸ் பக்கத்தில் ஆ.ராசாவின் பேச்சு அடங்கிய வீடியோவைப் பகிர்ந்துள்ளார். கூடவே, அதன் ஆங்கில மொழியாக் கத்தையும் வெளியிட்டிருக்கிறார்.

அத்துடன் அமித் மாள்வியா எழுதியுள்ள பதிவில், “திமுகவில் வெறுப்புப்பேச்சுகள் கட்டுப்பாடின்றி சென்று கொண்டிருக்கிறது. சனாதன தர்மத்தை ஒழிக்கவேண்டும் என்ற உதயநிதியின் பேச்சுக்கு பின்னர் இப்போது அக்கட்சி எம்பி. ஆ.ராசா இந்தியாவை துண்டாடும் பார்வையை முன்வைத் திருக்கிறார். கடவுள் ராமரை அவதூறாகப் பேசியிருக்கிறார். மணிப்பூர் மக்களைப்பற்றி தரக்குறைவாகக் கருத்துச் சொல்லியிருக்கிறார். இந்தியா என்ற தேசத்தையே கேள்விக்கு உள்ளாக்குகிறார்” என கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் அனுராக்தாக்கூர் கூறுகையில், “அவர்கள் இந்தியை அவதூறாக பேசுவார்கள். இந்தியாவின் கதையை முடிப்பதாக பேசுவார்கள். அவர்கள் சிறு, சிறு குழுக்களை ஆதரிப் பார்கள். அவர்களின் கட்சியினர் ராஜ்ய சபா தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் பாகிஸ்தான் வாழ்க என்பார்கள். அவர்களுக்கு இந்தியக் கலாச்சாரத்தை சிதைக்கவேண்டும். அவர்கள் இண்டியா கூட்டணியை உருவாக்கி யுள்ளார்கள். ஆனால் அன்றாடம் அவர்களின் ஆணவம் வெளிப்படுகிறது” என்று சாடியுள்ளார்.

பாஜக எம்.பி. ரவிசங்கர் பிரசாத், “இண்டியா கூட்டணியில் இருக்கும் கட்சியினருக்கு, இந்தியாவின் பாரம் பரியத்தை பழிப்பது, இந்துக் கடவுள்களை பொது வெளியில் ஏளனம்செய்வது, இந்தியா என்ற கருத்தியலையே கேள்விக் குறியாக்குவது அடையாள முத்திரையாகி விட்டது. அரசியல் ஆதாயங்களுக்காக காங்கிரஸ் இவ்வளவு தரம் தாழ்ந்து விட தயாராகிவிட்டது. அரசியலுக்காக இத்தகைய விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளவும் தயாராகிவிட்டதா?” என்று வினவியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

முதல்வர் மருந்தகம் இல்ல… ‘ம ...

முதல்வர் மருந்தகம் இல்ல… ‘முதல்வர் மாவகம்’ ; அண்ணாமலை விமர்சனம் முதல்வர் மருந்தகங்களில் மாவு விற்கப்படும் நிலையில், இதற்குப் பேசாமல், ...

பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை த ...

பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை திறந்த முதல்வர்; அண்ணாமலை குற்றச்சாட்டு அவசர அவசரமாக பேட்ச் வொர்க் செய்த கட்டடத்தை முதல்வர் ...

விரத மாலை அணிந்தார் நயினார் நாக ...

விரத மாலை அணிந்தார் நயினார் நாகேந்திரன் மதுரையில் நாளை மறுநாள் நடக்கும் முருகன் மாநாடு சிறப்பாக ...

காவல்துறையினர் பதவி உயர்விலும ...

காவல்துறையினர் பதவி உயர்விலும் ஏமாற்று வித்தை: தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம் திமுகவின் ஏமாற்று வித்தை, காவல்துறையினர் பதவி உயர்விலும் தொடர்வதாக ...

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்ச ...

குடும்பத்தில் மட்டுமே வளர்ச்சி -பிரதமர் மோடி சொந்த குடும்பத்தில் மட்டும் வளர்ச்சியுள்ளதாக ஆர்ஜேடி - காங்கிரஸ் ...

ஜி7 நாட்டு தலைவர்களுக்கு பிரதமர ...

ஜி7 நாட்டு தலைவர்களுக்கு பிரதமர் மோடி வழங்கிய பரிசுப் பொருட்கள் ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, கனடா, பிரான்ஸ், ...

மருத்துவ செய்திகள்

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...