தூத்துக்குடி, கோவை, நெல்லை மாநகராட்சி மேயர் பதவி, காலியாக இருந்த நகராட்சி தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி பதவிகளில் காலியான இடங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அறிவிக்கப்பட்ட அனைத்து பதவிகளுக்கும் அ.தி.மு.க. போட்டியிடுகிறது. பா.ஜனதா, களத்தில் உள்ளது தி.மு.க. காங்கிரஸ் உள்ளிட்ட மற்றகட்சிகள் போட்டியிடவில்லை.
தற்போது மாநிலம் முழுவதும் உள்ளாட்சி இடைத் தேர்தல் நடைபெறும் இடங்களில் தேர்தல்பிரசாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. கட்சி தொண்டர்கள் வீடுவீடாகச் சென்று ஓட்டுகேட்டு வருகிறார்கள். சூடு பிடித்துள்ள உள்ளாட்சி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
அதன்பிறகு குறிப்பிட்ட மாநகராட்சி, நகராட்சி உள்ளாட்சி பகுதிகளுக்கு தொடர்பில்லாத அனைவரும் அந்தந்த இடங்களை விட்டு வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது. ஓட்டுப் பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன.
தேர்தல் வருகிற 18ந் தேதி நடைபெறுகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான இடைத்தேர்தலுக்கு மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ... |
Leave a Reply
You must be logged in to post a comment.