இலங்கை இந்தியாவுக்கு அண்டை நாடு என்று கூறினால் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இந்தியாவின் உறவு நாடாகவே இலங்கையை நான் பார்க்கிறேன். என அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
3 நாடுகள் பயணத்தின் இறுதிக் கட்டமாக இலங்கை சென்ற நரேந்திர மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை உரை நிகழ்த்தினார்.
ஜவாஹர்லால் நேரு, இந்திராகாந்தி, மொரார்ஜி தேசாய் ஆகியோருக்குப் பிறகு இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய 4-ஆவது இந்திய பிரதமர் மோடி ஆவார்.
அவர் பேசியதாவது:
இலங்கை இந்தியாவுக்கு அண்டை நாடு என்று கூறினால் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். இந்தியாவின் உறவு நாடாகவே இலங்கையை நான் பார்க்கிறேன். இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே நிலவழிபந்தம் இல்லாமல் இருக்கலாம். ஆனால், ஒரே மாதிரியான உணர்வுகளாலும், கலாசாரத்தாலும் நாம் ஒன்றுபடுகிறோம்.
ஒருமைப்பாடும், மத நல்லிணக்கமுமே இந்தியாவின் பலமாகும். அதே சிறப்பம்சங்களை அடிப்படையாக கொண்டே இலங்கை கட்டமைக்கப் பட்டுள்ளதை யாரும் மறுக்க முடியாது. இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அதிபர் தேர்தலின் மூலம் ஜன நாயகத்தின் பெருமையை இலங்கை மக்கள் உலகுக்கே உரக்க கூறியுள்ளனர்.
21-ஆம் நூற்றாண்டை தீர்மானிக்க போவது இந்தியப் பெருங் கடல் பிராந்திய நாடுகள்தான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அதற்காக, நாம் (இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகள்) நம்மை தயார்படுத்தி கொள்ள வேண்டியது அவசியம்.
இந்த பிராந்தியத்தில் தவிர்க்க முடியாத சக்திகளாக இந்தியாவும், இலங்கையும் விளங்குகின்றன. எனவே, இந்த இருநாடுகளிடையே கடல்சார் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, பொருளாதாரம் ஆகிய துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பு இன்றியமையாதது.
இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை மிகவும் முக்கியமானதாக இந்தியா கருதுகிறது. நமது இரு நாடுகளும் இணைந்து இந்தியப் பெருங் கடல் பிராந்தியத்தின் மற்ற நாடுகளுடனான பாதுகாப்பு உறவை பலப்படுத்த வேண்டும்.
அப்போது தான் பயங்கரவாதத்தையும், எல்லை தாண்டிய அத்து மீறல்களையும் நாம் எதிர்கொள்ள முடியும். இலங்கைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக இருக்கிறது. குறிப்பாக, இலங்கையின் உள்நாட்டு வளர்ச்சியில் இந்தியா மிகப் பெரிய பங்களிப்பை அளிக்கும் என உறுதியளிக்கிறேன்.
இந்தியாவில் தற்போது ஏராளமான வர்த்தகவாய்ப்புகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. இதனை இலங்கை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் ஒருபகுதியாகவே, இந்தியா-இலங்கை இடையே விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகியுள்ளது.
இலங்கையின் வளர்ச்சி திட்டங்களுக்காக ரூ.9,600 கோடி வழங்க இந்தியா சம்மதித்துள்ளது. அதேபோல், மற்ற துறைகளின் வளர்ச்சிகளுக்காக ரூ.1,900 கோடியையும் இந்தியா வழங்கவுள்ளது.
இலங்கையிலிருந்து தமிழ் ஈழம் கோரி போராடி வந்த விடுதலை புலிகளுடனான போரில் தங்களின் ஒற்றுமை மற்றும் ஒருமைப் பாட்டு உணர்வுகளால் இலங்கை வெற்றிபெற்றுள்ளது.
இந்த போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களின் நலன் இந்தியாவுக்கு மிகவும் முக்கியம். தமிழர்கள் கண்ணியத் துடனும், அமைதியுடனும் வாழ வழிசெய்யுங்கள். அவர்களது வாழ்க்கைத்தரம் நல்லிணக்கத்துடன் மேம்படுவதை காணவே இந்தியா விரும்புகிறது.
இலங்கை அரசமைப்பில் 13-வது சட்டத்திருத்தம் விரைவில் அமலுக்கு வருவதன் மூலம் இந்தக் கூற்று நிஜமாகும் என நம்புகிறேன் என்றார் நரேந்திர மோடி.
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ... |
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.