விவேகானந்தர் இல்லத்தை வணங்கிய பிரதமர்

 சென்னை காமராஜர் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்தை பிரதமர் நரேந்திரமோடி வெள்ளிக்கிழமை வணங்கினார்.

சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற தேசிய கைத்தறி நாள் விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திரமோடி விமானம் மூலம் சென்னை மீனம் பாக்கம் விமான நிலையம் வந்தார். அங்கிருந்து விழா நடைபெறும் சென்னை பல்கலைக் கழகத்துக்கு அடையாறு வழியாக காமராஜர் சாலையில் காரில்வந்தார்.

விவேகானந்தர் இல்லம் அருகில் வந்த போது அவரது காரின்வேகம் குறைக்கப்பட்டது. அப்போது காரில் இருந்த படியே விவேகானந்தர் இல்லத்தைப் பார்த்து மோடி வணங்கினார். மேலும், அப்போது சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருந்த விவேகானந்தர் இல்லத்தை சேர்ந்த நிர்வாகிகள், பொது மக்களைப் பார்த்து மோடி கையசைத்தார்.

பிரதமர் மோடி சென்னை வரும் போது விவேகானந்தர் இல்லத்தைப் பார்வையிட திட்ட மிட்டிருந்ததாகவும், பாதுகாப்பு காரணங்களால் கடைசிநேரத்தில் அது தவிர்க்கப்பட்டதாகவும் பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

நம் உடலில் இரத்தத்தில் சர்க்கரை இருக்க வேண்டிய அளவு

உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ...

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...