தமிழகத்தில் வெள்ளசேத பகுதிகளை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி வரும் 29ம் தேதி (ஞாயிற்றுக் கிழமை) சென்னை வருகிறார் என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த மாதம் 28 ம்தேதி தொடங்கியது வங்க கடலில் அடுத்தடுத்து உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக நல்லமழை பெய்தது.
குறிப்பாக கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவடங்களில் கன மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளில் வெள்ளம் இன்னும் வடியாமல் உள்ளது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இதையடுத்து தமிழக அரசு தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்துவருகிறது. இந்நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் கோரிக்கையை ஏற்று வரும் 29 ம் தேதி தமிழக வெள்ள சேதபகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி சென்னை வருவார் என்று கூறப்படுகிறது.
முதலில் ஆந்திர மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளசேத பாதிப்புகளை பார்வையிடும் பிரதமர் மோடி பகலில் சென்னை வருகிறார். சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் முதலில் கடலூர்செல்லும் அவர், அங்கு வெள்ளசேதங்களை பார்வையிடுகிறார்.
பின்னர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கலில் வெள்ள பாதிப்பு களையும் ஹெலிகாப்டர் மூலமே பார்வையிடுகிறார், அவருடன் முதல்வர் ஜெயலலிதா, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் செல்வார்கள் என கூறப்படுகிறது.
இதையடுத்து அன்று மாலையே பிரதமர்மோடி சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் தில்லி திரும்புவார் என்று கூறப்படுகிறது.
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.