18 மாதகால பாஜக. ஆட்சியில் நடுநிலையான பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளோம்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த 18 மாதகால பாஜக. ஆட்சியில் நடுநிலையான பொருளாதார வளர்ச்சியை பெற்றுள்ளது. கடந்த 50 ஆண்டுக்கால காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேற்றப்படாத, மக்களுக்கு பயன்தரும் திட்டங்களை நரேந்திரமோடி அரசு குறுகியகாலத்தில் நிறைவேற்றி உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெற்றதோல்வியை காங்கிரஸ் கட்சியால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. அதனால்தான் அரசை செயல்பட விடாமல் தடுத்தும், நாடாளுமன்றத்தை முடக்கியும், சட்டங்களை ஏற்றவிடாமலும் தடுத்து வருகிறது.

காங்கிரஸ் ஆட்சியில் 50 ஆண்டுகளில் 3 கோடிபேருக்கு மட்டுமே வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டன. ஆனால் நரேந்திர மோடி ஆட்சியில் 20 கோடி பேருக்கு வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடியின் நல்லாட்சியில் ஏழைகள், பெண்கள், தாழ்த்தப் பட்டோர், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூக பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. காப்பீடுதிட்டங்கள், அனைவருக்கும் வங்கிக்கணக்கு, விவசாயிகள் பயிர்காப்பீடு திட்டம் போன்றவை மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும்.


காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் நிலத்தின்மீதும், நிலத்தின் அடியிலும், காற்றிலும், ஆகாயத்திலும் ஊழல்புரிந்தனர். ஆனால் பாஜக. ஆட்சியில் ஊழல்புகாரே இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் பல முறை மாநில அரசுகளை கலைத்தனர். 465 அவசரச்சட்டங்களை கொண்டுவந்தனர். ஆனால் நரேந்திரமோடி அரசு அருணாசலப்பிரேதச அரசை கலைத்ததற்கும், 2 அவசரச் சட்டங்களை கொண்டுவந்ததற்கும் எதிர்க்கட்சிகள் கூக்குரலிடுகின்றன.

ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் மாணவன் ரோத் தற்கொலை செய்துகொண்டது வேதனை தருவதாகும். ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி வருகின்றன. காங்கிரஸ் ஆட்சியின்போது தான் அந்த பல்கலைக்கழகத்தில் 10 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அப்போது ஏன் பிரச்சினையை எழுப்பவில்லை.


விழுப்புரத்தில் 3 கல்லூரிமாணவிகள் தற்கொலை தொடர்பாகவும், சென்னை ஐஐடி.யில் மாணவன் செந்தில் குமார் தற்கொலை தொடர்பாகவோ ஏன் காங்கிரஸ் குரல்தரவில்லை. அக்கட்சியின் தலைவர்களும் வந்து ஆறுதல் கூறவில்லை. நாட்டின் நலனை கருதியே மோடியும், பாஜக.வும் செயலாற்றி வருகிறது. புதுச் சேரியில் மாநில வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும். புதுவையில் தற்போது பாஜக.வில் 75 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். பாஜக. தொண்டர்கள் மத்திய அரசின் சாதனைகள், திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

மத்திய மந்திரி வெங்கையா நாயுடு

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...