நாட்டில் பொதுவிவாதங்கள் மிகவும் தரம் தாழ்ந்து வருகின்றன

பிரதமர் நரேந்திர மோடியின் பி.ஏ., எம்.ஏ. கல்விச் சான்றி தழ்களை பாஜக தேசியத்தலைவர் அமித்ஷா டெல்லியில் இன்று வெளியிட்டநிலையில், அந்த சான்று போலியானது என்று குற்றம்சாட்டியுள்ள ஆம் ஆத்மி கட்சி, அதுகுறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் கல்விதகுதி குறித்து சர்ச்சை கிளப்பிய ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதலமைச் சருமான அரவிந்த் கெஜ்ரிவால், " பிரதமர் மோடி எந்த வித பட்டப் படிப்பும் படிக்க வில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. நாட்டுமக்கள் இது குறித்த உண்மையை அறிய விரும்பு கின்றனர். இப்படி யிருக்கையில், அவரது கல்வித் தகுதி குறித்த ஆவணபூர்வ தகவல்களை வெளியிடவேண்டும்" என மத்திய தகவல் ஆணையத்தை (சிஐசி) வலியுறுத் தியிருந்தார். இது புதிய சர்ச்சையை கிளப்பியது.

இதனைத் தொடர்ந்து கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக டெல்லியில் இன்று பத்திரிகை யாளர்களை சந்தித்த பா.ஜ.க தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோர்,  டெல்லி பல்கலைக் கழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி இளங்கலை பயின்றதற்காக பெற்ற சான்றிதழையும், குஜராத் பல்கலைக் கழகத்தில் முதுகலை படித்ததற்காக பெற்ற சான்றிதழையும் காண்பித்தனர்.

பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ஜெட்லி "நாட்டில் பொதுவிவாதங்கள் மிகவும் தரம் தாழ்ந்து வருகின்றன. அதற்கு எடுத்துக் காட்டுதான் பிரதமர் மோடி மீது ஆம் ஆத்மி கட்சியினர் முன்வைத்த அடிப்படை ஆதாரமற்ற குற்றச் சாட்டு. பிரதமரின் கல்வித் தகுதியை விளக்குவதற்காக ஒரு பொதுக் கூட்டம் நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டதற்கு வெட்கப்படுகிறேன். தங்களது கட்சி எம்எல்ஏ.க்கள் பலர் போலிச்சான்றிதழ் வழக்கில் சிக்கியுள்ளதை மறந்துவிட்டு பிரதமர் மோடி மீது பொய்யான குற்றச் சாட்டுகளை முன் வைக்கின்றனர்" என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ ...

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ.7,200 கோடி திட்டங்கள். பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி ஒரு 10 பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்;பிரதமர் மோடி குற்றச்சாட்டு பீஹாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்ப ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம் லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் வான் ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உ ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும் வெள்ளரி காய்

வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...