நெடுஞ் சாலைகளில் விமானங்களை தரையிறக்கும் வசதியை கொண்டு வர மத்திய அரசு திட்டம்

தொலை விடப்பகுதிகளில் நெடுஞ் சாலைகளில் விமானங்களை தரையிறக்கும் வசதியை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக நெடுஞ்சாலை, சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

இது குறித்து மும்பையில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்று அவர் பேசியதாவது:

தொலை விடப் பகுதிகளில் உள்ள நெடுஞ் சாலைகளில் விமானங்களை தரையிறக்கும் வசதியை கொண்டுவர பாதுகாப்புத்துறை அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்திவருகிறோம். ஏனென்றால், அத்தகைய நெடுஞ் சாலைகள் எல்லைப்பகுதிக்கு அருகில் உள்ளன. இத்தகைய நெடுஞ்சாலைகள் தார் மற்றும் சிமென்ட் கலவையைக் கொண்டு அமைக்கப்பட உள்ளதால், விமானங்களின் எடையைத்தாங்கும்.

இந்தச்சாலைகளை நாம் தாற்காலிக விமான நிலையங்களாகவும் பயன் படுத்தலாம். இதன்மூலம், விமான நிலையங்களை அமைப்பதற்கும், அவற்றைப் பாராமரிப் பதற்கும் ஆகும் செலவை குறைக்கலாம்.

விமானங்கள் தரையிறங்கும் சமயத்தில் மட்டும் அந்தச்சாலையில் செல்லும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும். விமானம் தரையிறங்கிய பிறகு, வாகனங்கள்செல்ல அனுமதிக்கப்படும். விமானங்கள் தரையிறங்கிய பிறகு, சாலையோ ரங்களில் நிறுத்துவதற்கு வசதியாக இடங்களை அமைக்கவும் ஆலோசனை செய்துவருகிறோம்.

இந்த சாலைகளில் பயணிகள்விமானம், ராணுவ விமானம் என இரண்டுவகை விமானங்களையும் தரையிறக்குவது குறித்தும் பரிசீலனை செய்துவருகிறோம் என்று நிதின் கட்கரி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...