யோகா மேம்பாட்டுக்கா அடுத்த ஆண்டு முதல் விருது

தேசியளவிலும், சர்வதேச அளவிலும் யோகா மேம்பா ட்டுக்காகப் பணியாற்று வோருக்கு அடுத்த ஆண்டு முதல் ஆண்டுதோறும் விருதுவழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

2-வது சர்வதேச யோகாதினம் செவ்வாய்க் கிழமை நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சண்டீகரின் கேபிடால் வளாகத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற யோகாபயிற்சி நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பொது மக்களுடன் இணைந்து யோகாசனம் செய்தார். பள்ளிச்சிறார்கள் முதல் பாதுகாப்புப் படை வீரர்கள் வரை பலதரப்பட்ட மக்கள் இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மோடி பேசியதாவது:

உடலும், உள்ளமும் நலமாக இருக்க வேண்டு மென்றால் அனைவரும் யோகாசனப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இந்தியாவில் நீரிழிவுநோயாளிகள் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது. யோகாசனத்தை முறைப்படி தவறாமல் செய்து வந்தால் இந்த நோயின் பாதிப்புகளில் இருந்து பெருமளவில் விடுபட முடியும். இந்நோயைக் கட்டுப்படுத்த யோகா பயிற்சியாளர்கள் உதவவேண்டும். யோகா பயற்சி மூலம் நீரிழிவு நோயில் இருந்து விடுபட முடியும் என்ற விழிப்புணர்வை மக்கள்மத்தியில் ஏற்படுத்த இந்த ஆண்டு முழுவதும் முயற்சி மேற்கொள்ள உறுதியேற்க வேண்டும்.

இதுபோல ஒவ்வோர் ஆண்டும் வெவ்வேறு நோய்களுக்கு யோகா எவ்வாறு தீர்வு கொடுக்கும் என்பது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள வேண்டும். யோகாபயிற்சி செய்வதால் உடல் உபாதைகளில் இருந்து விடுபடுவது மட்டுமின்றி, உடல் ஆரோக்கிய த்தையும் மேம்படுத்த முடியும். மனித குலம் வாழ்க்கையை முழுமையாகவும், ஆக்கப் பூர்வமாகவும் வாழ்வதற்கு யோகாசனப்பயிற்சி மேற்கொள்வது மிகச்சிறந்த வழிமுறையாகும்.

2 விருதுகள்: உலகத்துக்கு இந்தியா அளித்த முக்கியக்கொடை யோகாசனம். சர்வதேச யோகா தினத்தை ஐ.நா. அறிவித்தது நமது பாரம்பரியத் துக்குக் கிடைத்த அங்கீகாரமாகும். இரண்டாவது சர்வதேச யோகாதினம் கொண்டாடப்படும் இந்த தினத்தில் இந்திய அரசுசார்பில் முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன்.

யோகாசனத்தின் மேம்பாட்டுக்காக சிறப்பாகப் பணியாற்றுவோர் அடுத்த ஆண்டுமுதல் விருது வழங்கி கெளரவிக்கப்படுவார்கள். சர்வதேச அளவில் சிறந்தபங்களிப்புக்கு ஒரு விருதும், தேசிய அளவில் சிறந்த பங்களிப்புக்கு மற்றொரு விருதும் வழங்கப்படும்.

யோகாசனம் என்பது மதம் சார்ந்தது அல்ல; அது வாழ்க்கைக்கான அறிவியல். இந்தியா போன்ற வளரும்நாட்டில் யோகாசனம் மூலம் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதால் மருத்துவச்செலவை பெருமளவில் குறைக்கமுடியும். எனவே, மக்கள் அனைவரும் இனிமேலும் தாமதிக்காமல் யோகாசனத்தை தங்கள்வாழ்வில் ஓர் அங்கமாக்க வேண்டும். இப்போது செல்லிடப் பேசி எப்படி உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாகி விட்டதோ, அதுபோல யோகாவும் இருக்கவேண்டும். இது கடினமான காரியமல்ல.

யோகாசனம் என்பது தொழிலாகவும் மாறி பல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து வருகிறது. சர்வதேச அளவில் யோகாவின் சிறப்புகளை முன்னெடுத்துச்செல்ல மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று மோடி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...