மாறுபட்ட கொள்கைகள் இருந்தபோதிலும் ஒத்துழைப்புடன் செயல்படுபவர் ஜனாதிபதி

அரசியலில் மாறுபட்டகொள்கைகள் இருந்தபோதிலும், பல்வேறு திட்டங்களை செயல்ப டுத்துவதில் அரசுக்கு ஒத்துழைப்புடன் செயல்படுபவர் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி. நான் டெல்லிக்கு வந்ததுமுதல் அவர் எனக்கு வழிகாட்டியாக விளங்குகிறார் என்று பிரதமர் நரேந்திரமோடி புகழ்ந்தார்.  ஜனாதிபதியாக பிரணாப் முகர்ஜி பதவியேற்று 4 ஆண்டு முடிவடைந்ததை யொட்டி, ஜனாதிபதி மாளிகையில் 2வது அருங் காட்சியகம் தொடக்க விழா நேற்று நடந்தது. இவ்விழாவில், ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

அப்போது ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்து மோடி பேசியதாவது: அரசியலில் எதிரெதிர் நிலைப்பாட்டுடன் இருந்தாலும் பொதுவிஷயங்களில் வேறுபாடுகளை மறந்து, இணைந்து செயல்படுவது எப்படி என்பது குறித்து ஜனாதிபதி பிரணாப்பிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். டெல்லி அரசியல் எனக்கு புதியதாக இருந்தநிலையில், என்னை கைபிடித்து அழைத்து செல்லும் வழிகாட்டியாக விளங்கியவர் பிரணாப். திட்டங்களை செயல் படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் எனக்கு ஆசானாக விளங்குகிறார். ஒருசிலரே இதுபோன்ற தனிச்சிறப்புகளை பெற்றிருப்பார்கள்.

ஜனாதிபதியின் ஒப்புதலுடன் புதுப்பிக்கத்தக்க எரி சக்தி, நீர் பாதுகாப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதை நினைத்து பெருமை அடைகிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு பிரணாப்பின் பங்கு மகத்தானது. வரலாறு, கலை, கற்பனைத் திறன், தொழில் நுட்பம் ஆகியவை ஒருங்கிணைந்த கூடமாக இந்த அருங் காட்சியகம் உள்ளது. வரலாற்றை அறிந்துகொள்ள இதை ஒவ்வொருவரும் பார்வையிடவேண்டும். வரலாறு மட்டுமின்றி தற்போதைய நிகழ்வுகளையும் இந்த அருங்காட்சி யகத்தின் மூலம் தெரிந்துகொள்ள முடியும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...