போராட்டம் நடத்தினால் நாட்டின் பொருளாதாரவளர்ச்சி தடைபடும்

போராட்டம் நடத்தினால் நாட்டின் பொருளாதாரவளர்ச்சி தடைபடும் என்று மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கூறினார்.மத்திய மந்திரி வெங்கையா நாயுடு சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
 
 
சுதந்திரத்திற்காக ரத்தம் சிந்திய தியாகச் செம்மல்கள் இன்றைய காலத்தில் உள்ள இளைய சமுதாயத்தில் சிலருக்கு தெரிவதில்லை.அதனால் சுதந்திரத்திற்காக பாடுபட்டவீரர்கள் பிறந்த இடத்தை தெரிந்துகொள்வதற்காக ‘திரங்கா யாத்ரா’ என்ற பயணத்தை (மூவண்ணக் கொடியுடன் பயணம் ) சுதந்திர தினத்தை யொட்டி பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். அதைத்தொடர்ந்து 70 மத்திய மந்திரிகள் மற்றும் எம்.பி.க்களைக் கொண்டு சுதந்திர போராட்டத்தில் ரத்தம் சிந்திய வீரர்கள் பிறந்த இடத்தில் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யச் சொன்னார். கட்டப்பொம்மன், வ.உ.சிதம்பரனார், பாரதியார் ஆகியோர் சிலைகளுக்கு நான் மரியாதைசெய்தேன்.
 
இன்றைய (நேற்றைய) தொழிலாளர்கள் போராட்டம் தேவையற்றது.தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு குறைந்த பட்ச சம்பளமாக ரூ.350 என்று நிர்ணயித்து உள்ளோம். இந்த அரசு ஏழைகளுக்காக பலதிட்டங்களை கொண்டு வந்துள்ளது. ஓய்வு பெற்றவர்களுக்கு பென்சன்தொகையை உயர்த்தி உள்ளோம்.
 
போராட்டம் நடத்தினால் நாட்டின் பொருளாதாரவளர்ச்சி தடைபடும். இந்தவேலை நிறுத்தத்தில் பெரியசங்கங்கள் ஈடுபடவில்லை. சில சிறிய சங்கங்கள்தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் இவ்வாறு வெங்கையா நாயுடு தெரிவித்தார் பேட்டியின்போது மாநில பாஜக.தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் உடன் இருந்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

புற்றுநோய்க்கான மருத்துவம்

பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...