லயிக்க வைக்கும் லாவோஸில் பாரத பிரதமர்-

இன்று உலகில் கம்யூனிஸ்ட் நாடுகள் என்ற லிஸ்டில் சீனா,கியூபா,வியட்னாம்,வடகொரியாவோடு இணைந்து
நிற்கும் ஒரு குட்டி நாடு லாவோஸ். சுமார் 70 லட்சம் மக்கள் மட்டுமேவசிக்கும் லாவோஸ்.நாட்டை அமெரிக் க குண்டுகள் துளைத்து இருந்தாலும் இயற்கை அன்னை தாலாட்டிக்கொண்டிருக்கிறாள்…தென்கிழக்கு ஆசியா வில் இந்தோ சீனா தீபகற்பத்தில் இருக்கும் இந்தகம்யூனி ஸ்ட் நாட்டில் நடைபெறும் 14வது ஆசியான் – இந்தியா மாநாடு மற்றும் 11வது கிழக்கு ஆசிய உச்சி மாநாடுகளி ல் கலந்து கொள்ள பிரதமர் லாவோஸ் சென்று இருக்கி றார்

வடக்கே சீனா மேற்கில் தாய்லாந்து தெற்கில் கம்போடி யா கிழக்கே வியட்னாம் சூழ அமைந்து ள்ள இந்த நாட்டி ன் தலை நகரம் வியன்டியான்,வியட்னாம்மாதிரியே பெயர் உள்ளதால் அமெரிக்கா வியட்னாமை தாக்குவத ற்கு முன் டிரையல் பார்க்க குண்டுகள் போட்டுதாக்கிய இடம்இது.புத்தமதம்செழிப்பாக வளர்ந்து நிற்கும் ஆசிய நாடுக ளில் லாவோஸ் முக்கியமானது.

இன்றைக்கும் நமக்கு ஆச்சரியமாக இருப்பது புத்தமதம் தான்.சமணமும் புத்தமும் இந்தியாவில் ஒரே காலக்க ட்ட த்தில் அதாவது கிமு ஆறாம் நூற்றாண்டில் இந்தியா வில்பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டாலும் இன்றைக்கும் இந்தியாவை தாண்டி தனி அடையாளத் துடன் ஆசிய நாடுகளில் பரவிஇருப்பது புத்த மதம்தான்

புத்த மதத்தின் பிறப்பிற்கு முன்பே நீண்ட வரலாறு கொண்ட சமணம் இந்தியாவை தாண்டி ஏன் வளர முடிய வில்லை.புத்தமதம் எப்படி உலகளவில் வளர்ந்து நிற்கிறதுஎன்று யோசித்தால் பௌத்தம் தன்னுடைய தாயிடம்சண்டை போடாமல் சமர்த்தாக வெளியே சென் று விட்டதுஆனால் சமணம் தன்னுடைய தாயிடம் வீட்டுக்குள்ளே சண்டையிட்டு தனக்கு தானே வீழ்ச்சி யை தேடிக்கொண் டது.

இந்த நிமிடத்தில் உலக மக்கள் தொகை 7,448,837,003
ஆகும்.அதாவதுஎழுநூற்று நாற்பத்தி நான்கு கோடி யேஎன்பத்தெட்டு லட்சத்து முப்பததேழா யிரத்து மூன்று ஆகும்.இதை எழுதி முடிப்பதற்குள் இன்னும் சில ஆயிரம் எகிறி விடும்இதில் கிறிஸ்துவமதம்ரோமன் கத்தோலிக் பிராட்டஸ்டண்டு,ஆர்தோடக்ஸ் என்று மூன்று பிரிவுக ளாக பிரிந்து இருந்தாலும் உலக மக்கள் தொகையில் சுமா ர் 230 கோடிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. அடுத்து சுமார் 2௦0 கோடி மக்களுடன் இஸ்லாம் மதம் சன்னி ஸியா என்று பிரிந்து நின்று அவர்களுக்குள் நீ பெரியவனா நான் பெரியவனா என்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது

அடுத்து மதமா அது எங்கிருக்கிறது அது ஒரு அபின் நாங்கள் மத சார்பற்றவர்கள் எங்க ளுக்கு மதம் தேவை யி ல்லை என்று சொல்லிக் கொண்டு ஒரு கூட்டம், உள்ளது ஆனால் அவர்களின் பெயரை வைத்தே அவர்க ள் எந்த மதத்தில் இருந்து வந் து ள்ளார்கள் என்று சொல் லி விடலாம்.இவர்கள் உலக மக்கள் தொகையினில் மூன்றா வது இடத்தில் இருக்கிறார்கள்.அதாவதுசுமார் 120 கோடி பேர் இருக்கி றார்கள்.

இதையடுத்து உங்களையும் என்னையும் சேர்த்து சுமார் 110 கோடி மக்களுடன் உலகம் தோன்றிய பொழுதே உதயமான சனாதான தரமத்தைபின்பற்றும் மக்கள் உள்ளனர்இது உலக மக்கள் தொகையினில் 15% ஆகும்.
இதையடுத்து சனாதான தர்மத்தில் இருந்து பிரிந்து புதிய கோட்பாடுடன் இந்தியாவில் பிறந்தபுத்தர் வகுத்த புத்த மதம் உள்ளது.உலகில்புத்த மதத்தினை சுமார் 55 கோடி மக்கள் பின்பற்றி வருகிறார்கள் என்பது இந்தியர்களுக்கு சந்தோசம் தான்.

ஏனென்றால் இந்தியாவில் இருந்து சென்ற மதம் ஒன்று
உலகில் நான்காவது பெரியமதமாக இருப்பது ஆச்சரியம் தான்.இங்கே தான் பௌத்தம் சமணத்தை விட வித்தியா சமாக நின்றது.சமணம் சனாதான தர்மத்துடன் சண்டை யிட்டே தன்னுடைய எல்லையை சுருக்கிக்கொண்டது .
ஆனால் பௌத்தம் தன்னுடைய தாயை தொந்தரவு செய்யாமல் வெளிநாடுகளுக்கு பயணப்பட்ட தால் தான்
இன்று உலக அரங்கில் வியாபித்து நிற்கிறது.

இன்று உலகளவில் சீனா,ஜப்பான், கம்போடியா, மியான் மர்தாய்லாந்து,வியட்நாம்,இலங்கை,பூடான்,மங்கோலியாசிங்கப்பூர்,மலேசியா,தைவான், லாவோஸ் என்று ஆசிய நாடுகளில் புத்தமதம் பரவி அங்கு புத்தருக்கு கணக்கில்அடங்காத கோயில்கள் கட்டப்பட்டு மக்கள் புத்தரை தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள் .

அதாவது சனாதானதர்மத்தில் பிறந்த ஒருவர் இன்று உலகமெங்கும் வழிபடப்படுகிறார் என்றால் அது நமக்கு பெருமையே..ஏனென்றால்புத்தமதம் அங்கிருந்த குட்டி குட்டி இனங்களை எல்லாம்தன்னுள் இணைத்துக் கொண் டு எங்களின் மூலம் எதுவென்றால் அது பாரத நாடு என்று பாரெங்கும் பறை சாற்றிக் கொண்டிருக் கிறது.இது நமக்குபெருமைதானே.

அப்படி நமக்கு பெருமை சேர்க்கும் நாடுகளில் ஒன்று
தான் லாவோஸ்.நாடு . . லாவோஸில், ஆயிரக்கணக் கான புத்தர் கோவில்கள் உள்ளன; ஒரு கோவிலில் மட்டும், 10 ஆயிரத்து, 136 புத்தர் சிலைகள் இருக்கிறதா ம்.நாட்டின் முக்கால் பகுதி மலை சூழ்ந்துள்ள காடுகள் நிறைந்தநாடு. இயற்கை எழில் கொஞ்சும்நாடு.

லாவோசுக்கும் இந்தியாவுக்கும் உள்ள ஒற்றுமை மிக அற்புதமானது.நாம் நம்முடைய கங்கை நதியினை கங்கா மாதா என்று சொல்கிறோம் அல்லவா.அது போல அங்கும்மேக்கொங் ஆற்றினை லாவோஸ் மக்கள் மா கங்கா என்று அழைக்கிறார்கள்.அதோடு தாய்லாந்து
இந்தோனே சியா மாதிரி இங்கேயும் ராமாயணம் மிக பிரசித்தி பெற்றஇதிகாசமாக போற்றப்படுகிறது.இங்கே ராமாயணத்தின்பெயர் ப்ரா லக் ப்ரா லாம்’ என்று லாவோஸ் மொழியில்சொல்லப்படுகிறது.

இங்கு ராமாயணம், புத்தர் தம் சீடர்களுக்கு உபதேசிப்பது போல கூறப்பட்டுள்ளது. .புத்தரே ராமரின் அவதாரமாக தோன்றியதாக இங்கே சொல்லப்படுகிறது.இதனால் ராமர் புத்தருடன்கலந்து வாவோஸ் மக்களின் வாழ்வில் கடவுளாக காட்சிஅளிக்கிறார்.தர்மத்தின் படி மனித வாழ்க் கை அமைய வேண்டும் என்று போதிக்கிறார். இப்படி புத்த மதம் பரவிய இடமெல்லாம் ராமாயணத் தின் மூலமான. சனாதான தர்மமும் பரவியதால் தான் புத்தமதத்தின் மீது நமக்கும் ஒரு ஈர்ப்புவருகிறது.

இங்குள்ள சீன்ங் கௌவான் என்கிற புத்தர் பூங்காவில் கோள வடி வில் ஒரு தூண் உள்ளது. இதன் அடிப்பகுதி யில் நரகத்தை போன்ற குகையும் நடுப்பாகம் நாம் வாழு ம் பூமியையும் தூணி ன் உச்சியில் சொர்க்கத்தை யும் சிற்பமாக வடித்து சனாதான தர்மத்த்தின் மூலக் கருத்தி னை பதிய வைத்து ள்ளார்கள். அதோடு இந்த பூங்காவில் புத்தர் சிலையோடு நாம் வணங்கும் சிவ பெருமான் பார்வதி விநாயகர் முருகன்,லஷ்மி கிருஷ் ணர் இந்திரன் பிரம்மா சரஸ்வதி சிலைகளும் உள்ளன.

இப்படி இந்தியாவின் கலாசாரத்துடன் தொடர்புடைய லாவோசில் நம்முடைய பிரதமர் டிஜிட்டல் தொடர்பி னை ஏற்படுத்த உள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

மஞ்சளின் மருத்துவக் குணம்

பசித் தூண்டியாகவும், நோய் தணித்தல், குடல் வாயு அகற்றியாகவும், தாது அழுகல் நீக்கியாகவும், ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...