கடந்த 3 மாதங்களாக, பல்வேறு அராஜகங்களை நான் எதிர்கொண்டு வருகிறேன்

"சுய லாபங்களுக்காக, சந்தர்ப்பவாத அரசியலை கடைப் பிடிக்கிறது காங்கிரஸ்; பழங்கதையாகிவிட்ட அக்கட்சியை மக்கள் நம்பவேண்டாம்' என்று பிரதமர் மோடி கூறினார்.


பஞ்சாபில் அடுத்த மாதம் 4-ம் தேதி பேரவைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி, ஆளும் சிரோமணி அகாலி தளம்-பாஜக கூட்டணிக்கு ஆதரவாக, ஜலந்தரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசியதாவது:


தனது சுயலாபங்களுக்காக, காங்கிரஸ் கட்சி சந்தர்ப்பவாத அரசியலை பின்பற்றுகிறது. பழங்கதையாகிவிட்ட அந்த கட்சியை, பஞ்சாப்மக்கள் நம்ப வேண்டாம்.


காங்கிரஸ் ஒரு மூழ்கும்கப்பல். அதில் மக்கள் பயணிக்கவேண்டாம். எந்த இடத்துக்கு செல்லவும் அது உதவாது. தண்ணீர் போன்ற அந்தக் கட்சி, அரசியல் லாபங்களுக்காக தனது வடிவங்களை மாற்றிக்கொள்ளும்.
காங்கிரஸ் ஒருவினோதமான கட்சி. மேற்குவங்க பேரவைத் தேர்தலில் இடதுசாரிகளுடன் அவர்கள் கூட்டு வைத்தனர். இடதுசாரிகள் எத்தனை தொகுதிகள் தந்தார்களோ, அதை ஏற்றுக்கொண்டனர். இப்போது, உத்தரப் பிரதேசத்தில் சமாஜவாதியுடன் கூட்டணி வைத்துள்ளனர். சமாஜவாதியைத் தொடர்ந்து விமர்சித்துவந்த காங்கிரஸ், சமாஜவாதியின் உள்கட்சி மோதலை வாய்ப்பாகப் பயன்படுத்தி, அந்தக்கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டுள்ளது.

காங்கிரஸின் சந்தர்ப்பவாத அரசியலால், நமதுநாடு கடந்த 70 ஆண்டுகளாக பல்வேறு இடர்பாடுகளை சந்தித்து வந்துள்ளது. இப்போதுதான், நாங்கள் வளர்ச்சிக்கான அரசியலை தொடங்கியிருக்கிறோம்.ரூபாய் நோட்டு விவகாரம்: ரூபாய்நோட்டு வாபஸ் நடவடிக்கை, ஊழலை ஒழிப்பதற்காகவே மேற்கொள்ளப்பட்டது. அதில், எவ்வித அரசியலும் இல்லை. உள்நாட்டு கருப்புப்பணத்தை வெளிக் கொண்டு வருவதற்காக எடுக்கப்பட்ட அந்த முடிவை, கடந்த 70 ஆண்டுகளாக சட்ட விரோதமாக சொத்துக்களை குவித்தவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. அதன் காரணமாக என்னைக் கடுமையாக விமர்சிக்கின்றனர்.


கடந்த 3 மாதங்களாக, பல்வேறு அராஜகங்களை நான் எதிர்கொண்டு வருகிறேன். ஆனால், எந்த அராஜகத்துக்கும் அடிபணிய மாட்டேன்  என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

மூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்

அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...