லாஜிஸ்டிக்ஸ் மாநாட்டில் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

நடைபெற்ற இந்திய மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மாநாட்டில் 2 லட்சம் கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.

கடந்த 3-ம்தேதி முதல் 5-ம்தேதி வரை டெல்லியில் இந்திய மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் மாநாடு நடைபெற்றது. இந்தமாநாட்டை மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம், தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சிஐஐ மற்றும் பிக்கி ஆகிய தொழிலக கூட்டமைப்புகள் இணைந்து நடத்தின. இந்தமாநாட்டில் நிறுவனங்களுடன் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் சுமார் 34 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துகொண்டது. இந்த 34 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 2 லட்ச கோடி ரூபாய் முதலீடுவரும் என கூறப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி கூறியதாவது: திட்டங்களை செயல்படுத் துவதற்காக மாநிலங்களின் உத வியை நாட இருக்கிறோம். மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்கள், மேம்படுத்தப்பட்ட சோதனை மையங்கள், லேண்ட் போர்ட்ஸ், துறைமுக இணைப்பை பலப்படுத்துவது, தொழில்நுட்பம் சார்ந்து லாஜிஸ்டிக்ஸ் திறனை மேம்படுத்துவதுபோன்ற திட் டங்களை கொண்டுவருவதற்காக மாநில அரசின் உதவியை நாடஇருக்கிறோம் என்று தெரிவித்தார்.

மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்கள் அமைப்பதற்காக அதானி லாஜிஸ்டிக்ஸ், அசெண்டஸ் அச்சிவர்ஸ் இன்ப்ரா சொல் யூசன்ஸ், சென்னை துறைமுக டிரஸ்ட், விசாகப்பட்டிணம் துறைமுக டிரஸ்ட், பியூச்சர் மார்க்கெட் நெட்வொர்க்ஸ் ஆகிய நிறு வனங்களுடன் இந்தியதேசிய நெடுஞ்சாலை ஆணையம் புரிந் துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்கள் குத்தகை அடிப்படையில் அமைக்கப்பட உள்ளன.

துறைமுக இணைப்பை மேம்படுத்துவதற்காக ஜே.என் துறைமுக டிரஸ்ட், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் இந்திய லேண்ட் போர்ட்ஸ் ஆணையம் ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...