இடைத்தேர்தலுக்கு பா.ஜ.க தயாராகவே உள்ளது

மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா தலைமையிலான அரசு ஆட்சியில் இருக்கும்நிலையில், 'இடைத்தேர்தலுக்கு பா.ஜ.க தயாராகவே உள்ளது' என  மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்

மகாராஷ்டிராவின் பல்வேறு இடங்களில், விவசாயிகள் தாம்வாங்கிய கடன்களை ரத்துசெய்யக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். போராட்டத்தின் வீச்சு அதிகரித்தநிலையில், கடந்த 11 ஆம் தேதி மாநில முதல்வர் பட்னாவிஸ், 'விவசாயக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று அறிவித்தார். 

இந்தப் பிரச்னை நடந்துகொண்டிருந்தபோது சிவசேனா எம்பி ஒருவர், 'விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லையென்றால், மகாராஷ்டிரா அரசுக்கு நாங்கள் கொடுத்துவரும் ஆதரவு திரும்பப்பெறப்படும்' என்று எச்சரிக்கை விடுத்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் முதல்வர் பட்னாவிஸ், 'விவசாயிகள் போராட்டம் நடந்து கொண்டிருந்தபோது, சிலர் அரசுக்குக் கொடுத்துவரும் ஆதரவு திரும்பப்பெறப்படும் என்று கூறினர். அவர்கள் விருப்பப்பட்டால், அதைச்செய்யட்டும். இடைத்தேர்தலைச் சந்திக்க பா.ஜ.க தயாராக இருக்கிறது. இடைத் தேர்தல் வந்தால், வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை இருக்கின்றது' என்று பேசியுள்ளார். 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தண்ணீர் மருத்துவம் ( வாட்டர் தெரஃபி )

தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே  இல்லை. மேலும் தண்ணீர் ...

உடற்பயிற்சியின் அவசியம்

கொழுப்புச்சத்தைக் குறைத்து உடலை சிக்கென்று ராணுவ வீரர் போல ஆக்க வேண்டுமா? ஜிம்முக்கு ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.