இந்தியா-சீனா இடையில் போர் வந்தால் இந்தியாவிற்கே வெற்றி.. சொல்வது சீனர்..!

இந்தியா-சீனா இடையில் போர் வந்தால் இந்தியாவிற்கே வெற்றி.. சொல்வது சீனர்..! Shu Xu.
கடந்த சில மாதங்களாக இந்திய சீனா எல்லையில் பல விதமான பிரச்சனைகள் வெடித்து வருகிறது, ராணுவ வீரர்கள் மட்டுமல்லாமல் இருநாட்டு அரசுகளும் முழு அளவில் தயாராகி வருகிறது. இந்திய அரசும், சீன எல்லையில் அதிகளவிலான வீரர்களைக் குவித்து வலிமைப்படுத்தி வருகிறது. இந்நிலையில் இந்தியா-சீனா இடையில் போர் வந்தால் யார் வெற்றிபெறுவார்கள் என்ற கேள்வி அனைத்துத் தரப்பு மக்கள் மத்தியிலும் எழுந்து வருகிறது.


இதேகேள்வியைக் குவராவில் கேட்கப்பட்டது சீனாவை சேர்ந்த முன்னாள் ராணுவ அதிகாரி விரிவான முறையில் விளக்கம் அளித்து இரு நாடுகள் மத்தியிலான முழுமையான போரில் இந்தியாதான் வெற்றிபெறும் எனத் தெரிவித்துள்ளார். இவர் கொடுத்துள்ள காரணங்கள் தான் இந்தியாவிற்குக் கூடுதல் பலத்தைச் சேர்த்துள்ளது


காரணம் 1

ஆயுதம் மற்றும் ராணுவ தொழில்நுட்பம்: சீனா இதுவரை பயன்படுத்தி இருப்பில் வைத்திருக்கும் ஆயுதங்கள் .. அதிகப்படியான ஆயுதங்கள் அனைத்தும் தன் நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது தான். அதுவும் இருப்பில் வைக்கப்பட்ட ஆயுதங்கள் ,,


ஆனால் இந்தியாவில் அப்படியில்லை, இந்தியா ஆயுத தயாரிப்பில் முன்னோடியாக இருக்கும் அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளிடம் சிறந்த நட்புறவு வைத்துள்ளதுள்ளது மட்டும் அல்லாமல் தற்போது இந்தியா பயன்படுத்தி வரும் அனைத்து ஆயுதங்களும் இந்த இரு நாடுகளுடையது தான். இதில் சீனாவை விட ஒரு படி மேல்.
அதுவும் இந்த 3 வருடத்தில் இந்தியா அனைத்து ஆயுதங்களையும் கொள்முதல் பண்ணி விட்டது..


காரணம் 2

ராணுவ தொழில்நுட்பம்: ஆயுதம் மற்றும் ராணுவ தொழில் நுட்பத்தில் உலகளவில் முன்னோடியாக இருப்பது அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ரஷ்யா நாடுகள் தான். இந்த நாடுகளின் தொழில்நுட்பத்தோடு சீனாவின் தொழில்நுட்பத்தை ஒப்பிட்டால் சீனாவின் தொழில்நுட்பம் வெறும் குப்பை.


அனைத்தையும் தாண்டி அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் இந்தியாவின் மிக முக்கிய நட்பு நாடு. இதில் அமெரிக்கா, இஸ்ரேல் இந்தியாவை விட்டு கொடுக்காது ,ரஸ்யா இந்தியாவை எதிர்க்காது.. அதுவும் போக ரஸ்யாவிடம் 1 லச்சம் கோடிக்கு ஆயுத ஒப்பந்தம் போட்டு குளிர்வித்து வைத்துள்ளார் மோடி ,, தன்னிடம் ஆயுதம் வாங்காத சீனாவை விட இந்தியா மேல் என்பது ரஸ்யாவின் எண்ணம்.


காரணம் 3

மக்கள் தொகை: உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் சீனாவும் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் நிலையில், இரு நாடுகள் மத்தியிலான போரில் கடுமையான நிலை இருக்கும்.
ஆனால் சீனாவில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் இருக்கும் ஒற்றைக் குழந்தை சட்டம். போரில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஒரு குழந்தைகள் உள்ள குடும்பங்கள் தங்களது பிள்ளைகளை ராணுவத்திற்கு அனுப்ப மனம் இருக்காது. அதேபோல் ஒற்றைக் குழந்தை கொண்ட தந்தைகளுக்கு இதே நிலைதான். இதில் இந்தியாவிற்குத் தான் வெற்றி.


காரணம் 4

அதிரடி சட்டம்: போரின் காரணமாகச் சீன அரசு 20 வயதுக்கும் அதிகமாக இருக்கும் ஆண்களை ராணுவத்திற்கு வர வேண்டும் என்ற வகையில் சட்டம் நிறேவேற்றினால், உள்நாட்டிலேயே அரசுக்கு எதிராகப் போர் உருவாகும். இதற்குச் சீனா அரசு இடமளிக்காது. ஆக இதற்கும் வாய்ப்புகள் இல்லை.


காரணம் 5

சமுக மற்றும் அரசியல் அமைப்பு: இந்தியா, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, இந்திய ராணுவ வீரர்கள் எவ்விதமான தூண்டுதல் இல்லாமல் தானாக முன்வந்து நாட்டைக் காக்கும் உணர்வு கொண்டவர்கள்.
சீனா ராணுவம் அப்படியில்லை. அரசு கட்டளைக்குப் பயந்தும், அரசை மகிழ்விக்கும் ஒரு ராணுவமாக இருக்கிறது.. கொஞ்ச ராணுவம் இறக்க நேரிட்டால் ராணுவம் நிலைகுலையும் ,, மக்களை மிரட்ட, அடக்க ராணுவம் இல்லை என்பதால் சுதந்திர காற்றை உணர்வது போல் மக்களுக்கு இருக்கும். இது நாட்டை துண்டாடி விடும், இது இந்தியாவிற்க கூடுதல் வெற்றி வாய்ப்பை அளிக்கிறது.


காரணம் 6

முக்கியமானது பொருளாதாரமும் எரிபொருளும் ,, இது எங்க இருந்து கொள்முதல் பண்ணினாலும் இந்தியாவை சுற்றியே வந்து ஆக வேண்டும்,, இந்திய கடற்படை அனுமதிக்காது , எரிபொருள் இல்லாமல் எப்படி ராணுவம் சண்டை போடும், நாட்டுக்குள் எரிபொருள் தட்டுப்பாடு வந்து விடும் ,விலைவாசி உயரும் மக்கள் கொதிக்க ஆரம்பிப்பார்கள் ,


காரணம் 7

தற்போது உலகில் அதிகமான நாடுகளுடன் நட்புறவு கொண்ட நாடு இந்தியாதான் ,, அதிலும் ஏதாவது ஒன்றை வைத்து ஒப்பந்தம் பல போட்டுள்ளார் மோடி , இது ஒரு வகையான ராஜ தந்திரம் ,போர் என்று வரும்போது அந்த நாடுகள் இந்தியாவையே விரும்பும் ,, நமக்கு நிறைய நாடுகள் நட்பு இல்லா விடடாலும் பரவாயில்லை எதிரியாக இருப்பது வேதனை ,, இதிலும் இந்தியாவுக்கே வெற்றி என் ஆசை

இப்படி இரு நாட்கள் மத்தியிலான போரில் இந்தியாவிற்கும் வெற்றிவாய்ப்பு அதிகளவில் உள்ளது என்பதைப் பட்டியலிட்டார் Shu Xu. மேலும் அவர் இந்தியா சீனாவிற்கு மத்தியில் போர் வரக்கூடாது என்று விரும்புவதாகவும், உலகிலேயே ஆசிய கண்டம் தான் மிகவும் அமைதியாக இருக்கிறது. இரு நாடுகள் மத்தியிலான போர், கடந்த நூற்றாண்டில் ஐரோப்பா சந்தித்த நிலைதான் ஏற்படும். அமைதி இதுவரை சீனாவில் நான் அமைதியான நிலையில் வாழ்ந்து வருகிறேன், இதுவே எனது வாழ்நாள் முழுவதும் இருக்க நான் விரும்புகிறேன் எனத்தெரிவித்தார்

One response to “இந்தியா-சீனா இடையில் போர் வந்தால் இந்தியாவிற்கே வெற்றி.. சொல்வது சீனர்..!”

  1. RP sathish says:

    ஒரு பாய்ண்ட் ஐ விட்டுவிட்டார். சிஐஎ,மொஸட்,ரா வின் கூட்டணி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...

இரத்த அழுத்த நோய்

இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

பிரண்டையின் மருத்துவக் குணம்

குடல் வாயு அகற்றியாகவும், பசி தூண்டியாகவும் நுண்புழுக் கொல்லியாகவும் செயல்படுகிறது.