பாரதிய ஜனதாவைக் குறைகூறும் மனநோய் ஸ்டாலினுக்கு உள்ளது

பாரத சாரணர் மற்றும் சாரணியர் இயக்கத்தின் தமிழ்நாடு மாநிலத் தலைவ ருக்கான தேர்தலில் போட்டியிடும் பாஜக தேசிய செயலர் எச்.ராஜாவுக்கு வாக்களிக்குமாறு கல்வித் துறை அதிகாரிகள் மிரட்டப்படுவதாகவும், அவருக்கு அப்பதவியைத் தாரை வார்க்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், கல்வி அமைச்சர் செங்கோட்டையனும் முயற்சிப்பதாக திமுக பொருளாளரும் தமிழகசட்டமன்ற எதிர்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் கூறியிருப்பதற்கு ராஜா மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசியவர், "அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதுபோல, தமிழகத்தில் எது நடந்தாலும் அதற்கு பாரதிய ஜனதாவைக் குறைகூறும் மனநோய் ஸ்டாலினுக்கு உள்ளது," என்று கூறினார்.

பிரிக்கப்படாத ராமநாதபுரம் மாவட்டத்தின் சாரணர்-சாரணியர் இயக்கத்தில் தனதுதந்தை பணியாற்றியதால், சிறுவயதில் இருந்தே தனக்கு அந்த அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும், நண்பர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் போட்டியிட ஒப்புக்கொண்டதாகவும் ராஜா கூறினார்.

மாணவர்கள் மனதில் காவி எண்ணங்களை விதைக்கும்முயற்சி என்று அவர் கூறுவது முற்றிலும் தவறானது. இது ஒரு கௌரவப்பதவி மட்டுமே. தேவையில்லாமல் ஸ்டாலின்தான் இந்தவிவகாரத்தை அரசியலாக்குகிறார். நான் போட்டியிடுவதில் என்ன தவறு என்று அவர்தான் கூறவேண்டும்," என்றும் ராஜா தெரிவித்தார்.

தமது பள்ளிக்காலத்தில் தான், தேசிய மாணவர் படையில் இருந்ததால் சாரணர் இயக்கத்தில் இருந்த தில்லை. ஆனால், அதில் தனக்கு பலநண்பர்கள் உள்ளனர் என்றார் ராஜா.

பாரத சாரணர் மற்றும் சாரணியர் இயக்கத்தின் தமிழ்நாடு மாநில தலைவருக்கான தேர்தலில் மனுதாக்கல் செய்திருந்த ஐந்துபேரில், தற்போது எச்.ராஜா மற்றும் முன்னாள் பள்ளி கல்விதுறை இயக்குனர் பி.மணி ஆகியோர் மட்டுமே களத்தில் உள்ளனர். மற்றமூவரும் போட்டியில் இருந்து விலகிக்கொண்டனர்.

 

One response to “பாரதிய ஜனதாவைக் குறைகூறும் மனநோய் ஸ்டாலினுக்கு உள்ளது”

  1. பல்லி விழும் பலன்கள் பகுதியை நீக்கி விட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...