நாட்டின் எல்லைப் பகுதிகள் அனைத்தும், பாதுகாப்பாக உள்ளன

நாட்டின் எல்லைகள் மிகவும் பாதுகாப்பாக உள்ளன; எந்தசவாலையும் எதிர்கொள்ள, ராணுவம் முழுமையாக தயாராக உள்ளது,'' என, ராணுவ அமைச்சர், நிர்மலாசீதாராமன் கூறினார்.

உத்தர பிரதேசத்தில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில், கன்டோன்மென்ட் வாரியம்சார்பில் நடந்த நிகழ்ச்சியில் ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். அவர் பேசியதாவது: இந்தியாவை துாய்மைபடுத்தும் திட்டத்தை, பிரதமர், நரேந்திர மோடி செயல்படுத்தி வருகிறார். இதில், ராணுவமும் பங்கேற்று வருகிறது.நாட்டில் உள்ள சுற்றுலா தலங்களை துாய்மையாகவைத்து இருக்கவேண்டியதன் அவசியம் பற்றி, ராணுவம் சார்பில், மக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும். மகாத்மாகாந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, 15 முதல், அக்., 2 வரை, ராணுவ அமைச்சகம் சார்பில், சிறப்பு துாய்மை பணி மேற்கொள்ளப்படும். ராணுவபாசறை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும், இந்த பணி மேற்கொள்ளப்படும்.

காஷ்மீர் எல்லை, டோக்லாம்பகுதி உள்ளிட்ட நாட்டின் எல்லைப் பகுதிகள் அனைத்தும், பாதுகாப்பாக உள்ளன. தேசத்தின் எல்லைகளை பாதுகாப்பதில், மத்திய அரசு, மிகவும் விழிப்புடன் செயல்படுகிறது. இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகள் அரசு எடுத்து வருகிறது. எனவே நாட்டின்பாதுகாப்பு குறித்து, யாரும் அச்சம் கொள்ள தேவை இல்லை.எந்த சவாலையும் எதிர்கொள்ள, ராணுவம் முழுமையாக தயாராக உள்ளது.
எல்லையில், பாகிஸ்தானின் அத்துமீறலுக்கு, விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

நெல்லியின் மருத்துவ குணம்

நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...