அகில இந்திய மஜ்லீஸ்கட்சியின் தலைவா் அசாதுதீன் ஒவைசியின் சவாலை ஏற்க பாஜக தொண்டா்கள் தயாராக இருக்கிறாா்கள் என்று உத்தரபிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளாா்.
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல்கட்சிகள் இப்போதிருந்தே தயாராகி வருகின்றன.
இதில் ஓம்பிரகாஷ் ராஜ்பா் தலைமையிலான சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைப்பதாக அசாதுதீன் ஒவைசி அறிவித்தாா். அந்தக் கூட்டணியில் அவரது கட்சி 100 இடங்களில் போட்டியிடுகிறது மேலும் பத்துககும் அதிகமான சிறுசிறு அமைப்புகளுடனும் கூட்டணி வைத்துள்ளனர் இது குறித்து பேசிய ஒவைசி, ‘யோகி ஆதித்யநாத்தை மீண்டும் உத்தர பிரதேச முதல்வராக அனுமதிக்க மாட்டோம். எங்கள் தரப்புநியாயம் சரியானது. அதற்காக கடுமையாக உழைப்போம். அதன்படியே அனைத்தும் நடக்கும். உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சியை அகற்றுவோம்’ என்றாா்.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் யோகி ஆதித்யநாத் கூறியதாவது:
ஒவைசி ஒருபெரிய தேசியத் தலைவா். நாட்டின் பல்வேறு பகுதிகளில் தோ்தல்பிரசாரத்துக்காக செல்கிறாா். அவருக்கென்று தனி வாக்கு வங்கி உள்ளது. அவா் பாஜகவுக்கு சவால் விடுத்துள்ளாா். அதனை ஏற்க பாஜகதொண்டா்கள் தயாராகவே உள்ளனா். உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் 300 தொகுதிகளுக்கு மேல்வெல்ல வேண்டுமென்று பாஜக தலைமை இலக்கு நிா்ணயித்துள்ளது. அதன்படி நாங்கள் வெற்றிபெறுவோம் என்று தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஊபி.,யில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கூட பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ... |
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |