துணை ராணுவப் படை யினரை உள்ளூர் போலீ ஸாருக்கு மாற்றாக மாநிலங்கள் கருதக் கூடாது : உள்துறை அமைச்சகம்

துணை ராணுவப் படை யினரை உள்ளூர் போலீ ஸாருக்கு மாற்றாக மாநிலங்கள் கருதக் கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டார்ஜீலிங் கில் நடை பெற்ற கோர்க்கா போராட்டத்தைக் கட்டுப்படுத்துவ தற்காக நிறுத்தப் பட்டிருந்த துணை ராணு வத்தினரை மத்திய அரசு திரும்ப அழைப் பதற்கு மேற்கு வங்க அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ள சூழலில், உள்துறை அமைச்சகம் இவ்வாறு கூறியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப் பட்டுள்ளதாவது:
மாநிலங்களில் துணை ராணுவப் படையினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்து வதற்கான கோரிக்கையை மிகவும் நெருக் கடியான நேரங்க ளில் மட்டுமே மாநில அரசு விடுக்க வேண்டும். தங்களது போலீஸார் மற்றும் ஆயுதப் படையினர் மூலம் தீர்த்துக் கொள்ளக் கூடிய பாதுகாப்புத் தேவை களுக்காகக் கூட, மத்திய அரசின் துணை ராணுவப் படைகளை அழைப்பதை மாநிலங்கள் வழக்கமாகக் கொண்டுள்ளன.
மேலும், தங்கள் மாநிலங்களில் நிறுத்தப் பட்டுள்ள துணை ராணுவப் படையினரை திரும்ப அனுப்பவும் சில மாநில அரசுகள் மறுப்பு தெரிவிக்கின்றன.
     எல்லைப் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை கள், மாவோயிஸ்டு களுக்கு எதிரான நடவடிக்கைகள் போன்ற மிகத் தீவிரமான தேவை களுக்காக மட்டுமே துணை ராணுவம் அழைக்கப்பட வேண்டும்.
மாநில போலீஸாருக்கு மாற்றாக, சாதாரண பணி களுக்காக அவர் களைப் பயன் படுத்தக் கூடாது. மாநிலங்களில் அதுவரை இல்லாத அளவுக்கு சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படக் கூடிய நெருக்கடி காலகட்டத்தில் தான் துணை ராணுவத்தினர் அழைக்கப்பட வேண்டும். இதற்காக, மாநில காவல் துறையின் சட்டம் – ஒழுங்குப் பிரிவின் தலைவரது தலைமை யிலான குழு ஒன்றை மாநில அரசுகள் அமைக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
மேற்கு வங்க மாநிலம், டார்ஜீலிங் மலைப் பகுதியை "கோர்க்காலாந்து' என்ற பெயரில் தனி மாநிலமாக அறிவிக்கக் கோரி, அங்கு கடந்த ஜூலை மாதம் முதல் போராட்டங்கள் நடத்தப் பட்டு வந்தன.அப்போது வன் முறையைக் கட்டுப் படுத்த மத்திய ரிசர்வ் காவல் படையினர் (சிஆர்பிஎஃப்) உள்ளிட்ட துணை ராணுவத்தினர் அந்தப் பகுதியில் குவிக்கப் பட்டனர். தற்போது பதற்றம் தணிந்து இயல்பு வாழ்க்கை திரும்பி யுள்ள நிலையில், துணை ராணுவ வீரர்களை திரும்ப அழைக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.எனினும், அதற்கு மேற்கு வங்க அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அதை யடுத்து, இந்த விவ காரத்தை கொல்கத்தா நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றுள்ள அமைச்சகம், மாநிலங்களுக்கு இந்தச் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...