இத்தாலிக்கும் இந்தியாவுக்கும் இடையே 6 ஒப்பந்தங்கள்

இத்தாலிக்கும் இந்தியாவுக்கும் இடையே வர்த்தகஉறவை மேம்படுத்தும் வகையில் 6 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. வர்த்தகம், எரி சக்தி, தொழில்மேம்பாடு போன்ற துறைகளில் இருநாட்டு உறவை மேம்படுத்தும் வகையில் இந்த ஒப்பந்தங்கள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரசுமுறை பயணமாக இத்தாலி பிரதமர் பாலோ ஜென்ட்டிலோனி மற்றும் அவரது மனைவி எமானுல்லாவுடன் நேற்று இந்தியா வந்தடைந்தார். அவருக்கு சிவப்புகம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்தப் பிறகு பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பாலோ ஜென்ட்டிலோனி உரையாடினார்.

சர்வதேச பிரச்சினைகள், பிராந்திய பிரச்சினைகள் தவிர இரு நாட்டு பிரதமர்களும் இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையே உள்ள அரசியல் மற்றும் பொருளாதார உறவை மேம் படுத்துவது குறித்து விவாதித்தனர். மேலும் இரு நாட்டையும் மேலும் வலுப் படுத்துவதற்கு உண்டான வாய்ப்புகள் குறித்து இருவரும் விவாதித்தனர். இந்த விவாதத்துக்குப் பின் இருநாட்டு பிரதமர்கள் இணைந்து பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

பிரதமர் மோடி தீவிரவாதம், சைபர் குற்றங்களைத் தடுப்பதற்கு இருநாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் இந்தியா – இத்தாலி வர்த்தக உறவை மேம்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறினார்.

இந்தசந்திப்பு நிறைவடைந்த பிறகு, ரயில்வேதுறை பாதுகாப்பு, எரிசக்தி, முதலீடுகள், தொழில்மேம்பாடு போன்ற 6 துறைகளில் இரு நாட்டுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத் தானது.

வர்த்தக உறவை பொறுத்தவரை இந்தியாவுடன் அதிகம் வர்த்தகம் செய்யும் நாடுகள் பட்டியலில் இத்தாலி ஐந்தாவது இடத்தில் உள்ளது. 2016-17-ம் நிதியாண்டில் இரு நாட்டுக்கும் இடையே 879 கோடி டாலர் மதிப்பு வர்த்தகம் நடை பெற்றுள் ளது.

490 கோடி டாலர் மதிப்புள்ள பொருட்களை இத்தாலிக்கு இந்தியா ஏற்றுமதி செய்துவருகிறது. 389 கோடி டாலர் மதிப்புள்ள பொருட்களை இத்தாலி நாட்டிலிருந்து இந்தியா இறக்குமதி செய்தி ருக்கிறது. இரு நாட்டுக்கும் இடையே உள்ள வர்த்தக பற்றாக் குறை 100 கோடி டாலராக உள்ளது. இது இந்தியாவுக்கு சாதகமாக உள்ளது.

2017-18-ம் நிதியாண்டில் முதல் நான்குமாதங்களில் இரு நாட்டுக்கும் இடையே உள்ள வர்த்தகத்தின் மதிப்பு 322 கோடி டாலராக உள்ளது. பிரதமர் மோடியை சந்திப்பதற்கு முன் மத்தியவெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்து பாலோ ஜென்ட்டி லோனி உரையாடினார். கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு பிறகு இத்தாலி பிரதமர் இந்தியா வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...