முறையற்ற பொருளாதாரம் நடந்தால் நாட்டிற்கு பலமில்லை

தனது ஆட்சிகாலத்தில் நடந்த ஊழல்கள் அனைத்தையும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கண்டும், காணாமல் இருந்தார் என மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதா ராமன் கூறினார்.
 

சென்னையில் நிருபர்களை சந்தித்தவர் கூறியதாவது: கறுப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கைவாக்குறுதி. வெளிநாட்டில் உள்ள கறுப்புபணத்தை கொண்டுவர தேர்தல் அறிக்கையில் விரிவாக சொல்லா விட்டாலும், நடவடிக்கை எடுப்போம் எனக் கூறியிருந்தோம். கறுப்புபணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்று ரூபாய்நோட்டு வாபஸ். இது திடீரென எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல. வெளிநாடுகளில் உள்ள கறுப்புபணத்தை மீட்பதில் உறுதியாக உள்ளோம்.

கடந்த 2013 மற்றும் 2015 வந்த சர்வதேச ஆய்வுஅறிக்கையில், 'பதுக்கப் பட்ட பணம், அதிகமதிப்பு நோட்டுகள் மூலம்தான் பணம் பதுக்கப்படுகிறது அது பதுக்கப்பட்டகாலம், புழக்கத்தில் இரு்கும் வரை அனைத்தும் கணக்கில் வராது' என, கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு கணக்கு கேட்க முடியாது. இதனை கணக்கில்கொண்டு வர வேண்டும் என்பது அரசின் முயற்சி. வெளிப்படையாக பணப்பரிவர்த்தனை நடந்தால், அரசுக்கு நல்லது.அனைத்தும் வெளிப்படையாக நடந்தால் வரி வருமானம் வரும். இந்திய பொருளாதாரம் பெரியபொருளாதாரமாக இருந்தாலும், 86 சதவீதம் ரொக்க பரிவர்த்தனையால் நடந்தது. இதனால், அரசுக்கு வருமானம்வராது. முறையற்ற பொருளாதாரம் நடந்தால் நாட்டிற்கு பலமில்லை; மாநிலங்களுக்கும் பல மில்லை.

ரொக்கம் மூலம் பரிவர்த்தனை நடக்கும்போது எதை வாங்கலாம். வாங்கவேண்டாம் என்பதை கணிக்க முடியாது. ரூபாய் நோட்டு வாபஸ்காரணமாக பணவிநியோகம் செய்ய முடியாத நிலையில், காஷ்மீரில் கல் எறிபவர்கள் பணம் கிடைக்காமல் திணறினர்.முன்னர் 4 ஆயிரத்திற்கு மேல் இருந்த கல்எறியும் சம்பவங்கள், கடந்த வருடம் 600 வரைக்கும் குறைந்தது. இன்று நூற்றுகணக்கில்தான் உள்ளது. பயங்கரவாதிகளுக்கு பணம் கெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கள்ள நோட்டு எடுத்து சென்று பயங்கரவாதிகளுக்கு கொடுக்கப்படுவது நிறுத்தப்பட்டது.பழையநோட்டை வைத்திருப்பதில் பயனில்லை. அதை வைத்த கொண்டு திரிபவர்களை கேள்விகேட்க அரசுக்கு உரிமை உள்ளது.காஷ்மீரில் வங்கியில் பணத்தை கொள்ளையடிக்கும் முயற்சி அதிகளவில் நடக்கிறது. இதனை அரசு கவனித்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

கறுப்பு பணத்தை ஒழிக்க சுப்ரீம் கோர்ட்போட்ட உத்தரவை காங்கிரஸ் மதிக்கவில்லை. நாங்கள் ஆட்சி அமைத்ததும் முதல் கட்டமாக சிறப்பு புலனாய்வுகுழு அமைத்தோம். கறுப்பு பணத்தை ஒழிப்பதில் காங்கிரசுக்கு எந்த அக்கறையும் இல்லை. 500, 1000 ரூபாய் வாபசை முன் கூட்டியே அறிவித்தால் பதுக்கி வைத்துள்ள வர்களை கண்டுபிடிக்க முடியுமா. வங்கிக்குவந்த அனைத்து பணமும் வெள்ளை இல்லை. காங்கிரஸ் மக்களை குழப்பத்தை ஏற்படுத்தும்வகையில் சொல்லும் கருத்துகள் அனைத்தும் நியாயமில்லை.கறுப்புபணத்தை வங்கியில் போட்டு வெள்ளையாக மாற்றியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டின் பொருளா தாரத்தை வலுப்படுத்தும் வகையில் அரசு செயல் பட்டது.

சட்டப்பூர்வமான கொள்ளை , கட்டமைக்கப் பட்ட திருட்டு என விமர்சனம்செய்த மன்மோகன் சிங், பிரதமராக இருந்தகாலத்தில் சட்டப்பூர்வமான கொள்ளையும், கட்டமைக்கப்பட்ட திருட்டும் நடந்தது. அனைத்திலும் வெளிப் படையாக ஊழல் நடந்தது. அப்போது அவர் கண்டும்காணாமல் இருந்தார். மன்மோகன்சிங் ஒரு கருவியாக இயங்கி கொண்டிரு்தார் என்பதை மீடியாக்கள் கூறின. மன்மோகன் பேசுவது வேதனை அளிக்கிறது. ஏமாற்ற மளிக்கிறது. கறுப்புபணம் குறித்து எவர் மீதும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கைபாரத்த அவர், மத்திய அரசு அனைத்திற்கும் விளக்கம் அளித்து, தனிப்பட்ட யாருக்கும் லாபம் இல்லை எனக்கூறும் நிலையில் அவர் விமர்சனம் செய்வது வேதனை அளிக்கிறது.

 

டிஜிட்டல் பரிவர்த்தனை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுவருகிறது. வருமானத்திற்கு அதிகமான பணம் குறித்து விசாரிக்க அரசுக்கு உரிமைஉள்ளது. கறுப்புபணத்தை ஒழிப்பதற்கான முயற்சி தொடர்ந்து கொண்டே இருக்கும். அரசு திட்டங்களிலிருந்து போலியான நபர்கள் ஆதாயம் பெறுவது தடுக்கப்படுகிறது. ரூபாய் நோட்டுவாபஸ் திட்டம் குறித்து நடிகர் கமல் முழுமையாக புரிந்து கொள்ளவேண்டும். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை

பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ...

ஆஸ்துமாவை குணமாக்கும் மிளகு

ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...