இந்தியா தொழில்செய்ய மிகவும் சிறந்த நாடாக மாறியுள்ளது

பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் இந்தியா தொழில்செய்ய மிகவும் சிறந்த நாடாக மாறியுள்ளது என நிதி அமைச்சர் அருண்ஜெட்லி கூறியுள்ளார். இதுதொடர்பாக சிங்கப்பூரில் நடைபெற்ற தொழில்தொடர்பான நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தொழில்செய்வதற்கு உகந்த நாடுகளின் தரவரிசை பட்டியலை உலகவங்கி கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டது.

அதில் இந்தியா 30 இடங்கள் முன்னேறி உள்ளது. மோடி தலைமையில் தொழில்செய்ய சிறந்த நாடாக இந்தியா மாறியுள்ளதை இது எடுத்து காட்டுகிறது. கடந்தஆண்டு மேற்கொள்ளப்பட்ட ரூபாய் நோட்டுவாபஸ் நடவடிக்கை, ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்தல் போன்ற நடவடிக்கைகளுக்கு பிறகு எலக்ட்ரானிக் பணபரிவர்த்தனையில் மிகப் பெரிய அளவில ்முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அதைதொடர்ந்து பல்வேறு வரிவிதிப்புக்கு பதிலாக ஒரே சீரான வரியை விதிக்கும் வகையில் ஜி.எஸ்.டி அமல் படுத்தப்பட்டுள்ளது.

வங்கிகள் மூலமாக நடை பெறும் பணப் பரிவர்த்தனைகளும் அதிகரித்து வருகின்றன. அமைப்புசார்ந்த  மற்றும் சாராத தொழில்துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. வரிவிதிப்பு முறையில் அமைப்பு ரீதியாக சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்திய பொருளாதாரம் சீரான வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியபொருளாதாரம் நீண்ட காலப்பலன்களை அளிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இவ்வாறு ஜெட்லி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

ஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்

ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ...

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...