மகன் பியூன் ஆனதால் பெருமைப்படும் பாரதிய ஜனதா எம்.எல்.ஏ.

எம்.எல்.ஏ-வின் மகன்கள் ஆடிகாரில் பவனிப்பதைப் பார்த்திருக்கிறோம். ராஜஸ்தானின் ஜம்வா ராம்கார் தொகுதி பாரதிய ஜனதா எம்எல்ஏ., ஜக்தீஷ் நாராயண் என்பவரின் மகன் ராமகிருஷ்ணா, பியூன்வேலையில் சேர்ந்திருக்கிறார். எம்.எல்.ஏ-வின் செல்வாக்கால் மகனுக்கு பியூன்வேலை கிடைத்துள்ளதாக சர்ச்சையும் எழுந்துள்ளது.

ராஜஸ்தான் மாநில தலைமைச் செயலகத்தில், பியூன்வேலைக்கு 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தனர்.  அதில், 10-ம் வகுப்புபடித்த ராம்கிருஷ்ணாவும் ஒருவர். இவர், பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்தவர். ஆனால், இந்தபடிப்புக்கு 5-ம் வகுப்பு வரை படித்திருந்தால் போதுமானது. அந்தவகையில், ராம்கிருஷ்ணா அதிக தகுதியுடையவராகிறார். 

''ராம்கிருஷ்ணா 10-ம் வகுப்புவரை படித்திருக்கிறார். அதிகத் தகுதியுடைய  இவருக்கு, ஏன் இந்தப்பணி வழங்க வேண்டும்? எம்.எல்.ஏ-வின் செல்வாக்கு காரணமாக மகனுக்கு பியூன்வேலை கிடைத்துள்ளது'' என்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்த எம்.எல்.ஏ., ஜக்தீஷ் நாராயண் மீனா கூறுகையில், '' என் செல்வாக்கை பயன் படுத்தி மகனுக்கு பியூன் வேலைதான் வாங்கித் தரவேண்டுமா. இதைவிட நல்ல வேலையில் அல்லவா சேர்த்து விடுவேன். என் மகன் தேர்வில் எந்தத்தவறும் இல்லை. நேர்மையான முறையில்தான் அவனுக்கு வேலை கிடைத்திருக்கிறது. இவர்தான் என் மூத்தமகன். எனது விவசாய நிலத்தையும், தன் சகோதரர்களையும் அவன் பார்த்துக் கொண்டதால், மேலே படிக்கவைக்க முடியவில்லை'' என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...