அனைத்து நதி நீர்ப் பிரச்னைகளுக்கும் தீர்வுகாண மத்திய அரசு முயற்சித்து வருகிறது

கோதாவரி நதிநீரை தமிழகத்துக்கு கொண்டுவந்து, அனைத்து நதி நீர்ப் பிரச்னைகளுக்கும் தீர்வுகாண மத்திய அரசு முயற்சித்து வருகிறது என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்

திருச்சிவிமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி: விவசாயிகளின் பிரச்னையைத் தீர்க்க மத்திய அரசு பெரும்முயற்சி எடுத்து வருகிறது. மண் பரிசோதனைக்காக நில வள அட்டை, பயிர்ப் பாதுகாப்புத் திட்டம் போன்ற பலதிட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மத்திய அரசின் பங்கீட்டுத்தொகை செலுத்தப்பட்ட பிறகும் மாநில அரசு காப்பீட்டு தொகையை விவசாயிகளிடம் கொண்டுசேர்ப்பதில் தாமதமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. விவசாயிகளுக்கு கிடைக்கவேண்டிய பயிர்க் காப்பீட்டுத்தொகை கிடைக்கவில்லை. 

காவிரிப் பிரச்னையில் இன்னும் 4 வாரங்களில் தீர்ப்புவர இருக்கிறது. காவிரிப் பிரச்னையில் என்ன செய்திருக்கிறீர்கள் எனக் கேள்விகேட்பவர்கள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போது என்ன செய்தார்கள். தாங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது பிரச்னையைத் தீர்த்து வைக்காதவர்கள் இன்று கேள்விக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். 


காமராஜர் பலஅணைகளைக் கட்டினார். திமுக, அதிமுக ஆட்சிக் காலங்களில் எத்தனை அணைகள் கட்டப்பட்டன. பாலாற்றின் குறுக்கே ஆந்திரம் அணைகட்டுகிறது. காவிரியின் குறுக்கே அணைகட்டுகிறார்கள். ஆனால், தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்பதை கேள்விக் குறியோடு பார்க்கவேண்டும். அதனால் தான் மத்திய அரசு கோதாவரி நதிநீரை தமிழகத்துக்கு கொண்டுவந்து இங்குள்ள அனைத்து நீர்ப் பிரச்னைகளுக்கும் தீர்வுகாண முயற்சி செய்துவருகிறது. 


தற்போது தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் முழுநோக்கம் கட்சியைப் பலப்படுத்துவதுதான். உள்ளாட்சித் தேர்தலில் எங்கள் வளர்ச்சி புலப்படும். இரண்டு கழகங்களுக்கும் இடையில் தான் நாங்கள் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறோம். எங்கள் பலத்தை காண்பிப்பது இப்போது நோக்கமாக இருக்கிறது. நவீன நகரங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை மாநில அரசு சரியாக பயன்படுத்த வில்லை. இதை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார் தமிழிசை சௌந்தரராஜன்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...