தமிழகம் ஒருபோதும் புறக்கணிக்கப்பட வில்லை

பாஜக மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் கள்ளக்குறிச்சியில் நேற்று நடைபெற்றது. இதில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணியில் எந்தமாற்றமும் இல்லை.

மழைவெள்ள பாதிப்பு குறித்து மத்தியக்குழு பார்வையிட்டு சென்றநிலையில், மழை பாதிப்புநிவாரணத் தொகை இதுவரைதமிழகத்துக்கு வழங்கப்படவில்லை என்று கூறுகின்றனர். பேரிடர் மேலாண்மை நிதி, பேரிடர் காலத்துக்கு முன்னரே மத்திய அரசு நிதி ஒதுக்கும். அந்த விஷயத்தை மாநில அரசுகள் கூறுவதில்லை.

பேரிடருக்குப் பிறகு மத்தியக்குழு ஆய்வு செய்து மத்திய, மாநில அரசுகளுக்கு அறிக்கை அளித்துள்ளது. அதனடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும். மேலும், தற்போது ஆளும் திமுக அரசானது பாதிக்கபட்ட விவசாய நிலங்கள் குறித்து முறையாக பதிவுசெய்திருந்தால் கண்டிப்பாக மத்திய அரசிடம் இருந்து நிதி வரப் பெற்றிருக்கும்.

நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழகத்துக்கு வலுசேர்க்கும் வகையில் திட்டங்கள் உருவாகும். ஆண்டுதோறும் மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு சிறப்பாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் தமிழகத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தமிழகம் ஒருபோதும் புறக்கணிக்கப்படவில்லை. கடந்த 7 ஆண்டுகளில் மத்திய பட்ஜெட்டில் ரூ.7.5 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சாலை மேம்பாட்டு பணிகளுக்காக மட்டும் ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது.

பெட்ரோல் விலையில், மாநில அரசு வரிகளைக்குறைத்து, விலையைக் குறைக்க பாஜக போராட்டம் நடத்திவருகிறது. பாஜகவின் சட்டப்பேரவை தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல்விலை குறைக்கப்படும் எனக் கூறவில்லை. ஆனால், திமுக தேர்தல் அறிக்கையில், பெட்ரோல் ரூ.5-ம், டீசல்விலையில் ரூ.4-ம் குறைப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

இது வரையில் ரூ.3 மட்டுமே குறைத்துள்ளனர். தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல திமுக அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவில்லை என்று தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்த ...

ஏஐ உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி டெல்​லி​யில் பிரம்​மாண்ட செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின ...

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்புத் துறையில் வளர்ந்து வரும் தற்சார்பு திறன் வெளிப்படுத்தப்பட்டது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் ...

புதுதில்லியில் இந்திய செயற்கை ...

புதுதில்லியில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க கண்காட்சி 2026-ஐத் திறந்து வைத்தார் பிரதமர் புதுதில்லியின் பாரத மண்டபத்தில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க ...

இந்து மக்களுக்கு எதிரான வெறுப் ...

இந்து மக்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் முடிவுக்கு வந்துவிட்டது போட்றா வெடிய! இந்தியாவின் கைகளுக்குள் வந்த வங்கதேசம்; வெற்றி ...

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக ...

இந்திய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் புதிய பிரதமர் அலுவலகம் ஒரு பார்வை அம்மாடியோவ்! இவ்வளவு பாதுகாப்பா?; ஒரு ஈ, எறும்பு கூட ...

வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய ...

வர்த்தக ஒப்பந்தம் குறித்து பொய்களைப் பரப்பும் ராகுல்; மத்திய அமைச்சர்கள் சவுகான், கோயல் குற்றச்சாட்டு லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...