ஜெயலலிதா எங்கு இருந்தாலும், தமிழகமக்களின் முகத்தில், மலர்ச்சியை பார்த்து, மகிழ்ச்சி அடைவார். இன்று, இருசக்கர வாகனத்திற்கு மானியம் வழங்கும் திட்டம், 70 லட்சம் மரக்கன்றுகள் வழங்கும் திட்டம் ஆகியவற்றை, துவக்கி வைத்துள்ளேன்.
பெண்களுக்கு அதிகாரம் கொடுக்கும் திட்டம், இயற்கையை பாதுகாக்கும்திட்டம் ஆகிய இரண்டும் நீண்டகால திட்டங்கள். பெண்ணுக்கு அதிகாரம் கொடுக்கும் போது, அந்தகுடும்பமே அதிகாரம் பெறும். குடும்பத்தில், ஒருபெண் படித்தால், குடும்பமே படித்ததற்கு சமம். பெண்ணின் நலம் பேணினால், குடும்ப நலன் மேம்படும்.எனவே, பெண்கள் அதிகாரம்பெறும் வகையில், ஏராளமான திட்டங்களை, மத்திய அரசு செயல்படுத்துகிறது.
சாதாரண மக்களின் வாழ்க்கையை எளிமைப் படுத்துவதற்கான முயற்சிகளை, மத்திய அரசு செய்துவருகிறது. ஏழைமக்கள், விவசாயிகள் என, அனைத்து தரப்பினரும் முன்னேறு வதற்காக, பல்வேறு திட்டங்கள் செயல் படுத்தப் படுகின்றன.'பிரதான் மந்திரி முத்ரா யோஜனா' திட்டத்தில், 4.60 லட்சம் கோடி ரூபாய், எந்த வித உத்தர வாதமும் இல்லாமல், மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பலனடைந் தவர்களில், 70 சதவீதம் பேர், பெண்கள் என்பது முக்கியமானது.
பெண்தொழில் முனைவோருக்கு, 10 லட்சம் ரூபாயில் இருந்து, ஒருகோடி ரூபாய் வரை, கடன் வழங்கப்படுகிறது. சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், பெண்கள் கடன் பெற்றுள்ளனர்.
பெண்களுக்கான மகப்பேறு விடு முறையை, 12 வாரங்களில் இருந்து, 26 வாரங்களாக அதிகரித் துள்ளோம்.
இரவு பணிகளில் பெண்கள் ஈடுபடுத்த படுவதை தவிர்க்கும் படி உத்தரவிட்டுள்ளோம். 'ஜன்தன் யோஜனா' திட்டத்திலும், 16 கோடி பெண்கள், வங்கிகணக்கு துவங்கி உள்ளனர். உஜ்வாலா திட்டத்தில், 29 கோடி எல்.இ.டி., பல்புகள் வினியோகம் செய்துள்ளோம். இதனால், 15 ஆயிரம் கோடி ரூபாய் மிச்சப் படுத்தப்பட்டுள்ளது. இத் திட்டத்தால், கார்பன் மாசு குறைக்கப்பட்டு உள்ளது.
உஜ்வாலா திட்டத்தின்கீழ், புகை மாசற்ற வகையில், 3.4 கோடி இலவச காஸ் சிலிண்டர் கள் வழங்கப்பட்டுள்ளன; தமிழகத்தில்,9.5 லட்சம் பெண்கள் பயன்பெறுகின்றனர். அனைத்து பள்ளிகளிலும், கழிப்பறைவசதி ஏற்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. சாமானியர்களுக்கு அதிகாரமளித் தலை, முதன்மை நோக்கமாகக் கொண்டு, மத்திய – மாநில அரசுகள் செயல்படுகின்றன.
ஊரக வீட்டு வசதி துறைக்காக, 2016 – 17ம் நிதியாண்டில், 700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, 3,700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.சூரிய மின்சக்தி, தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு, தமிழகத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காங்., கூட்டணி ஆட்சி, மத்தியில் இருந்தபோது, 13வது நிதிக்குழு பரிந்துரையின்படி, தமிழகத்திற்கு, 81 ஆயிரம்கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கப்பட்டது.தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தபின், 14வது நிதிக்குழுவில், தமிழகத்திற்கு, 1.80 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்., அரசைவிட, 120 மடங்கு கூடுதல்நிதி, தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது.
துாய்மை இந்தியா திட்டத்தின்கீழ், பெண்கள் உரிமை மதிக்கப் படுகிறது.மத்திய அரசு திட்டத்தால், தமிழக விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். தமிழக மீனவர்கள், ஆழ்கடல் மீன்பிடித் தொழில் மேற்கொள்வதற்காக, மத்திய அரசு, தமிழக மீனவர்களுக்கு, 750 படகுகள் கட்ட, 120 கோடி ரூபாய் வழங்கி உள்ளது.இவ்வாறு பிரதமர் பேசினார்.
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
கடந்த 1922-ஆண்டில் ஃப்ரெடெரிக் பாண்ட்டிங்க் என்ற விஞ்ஞானி, சார்லஸ்பெஸ்ட் என்பவருடன் இணைந்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.