மோடியின் கெட்டிக்காரத்தனத்தை கண்டு பிரமிச்சு போனேன்

சமூக வலைத்தளங்களில் ரங்கராஜ் பாண்டேவின் பேட்டிகள் விவாதங்களாகும். சூழல் மாறி இந்த வாரம் அவரே விவாதமானார். செய்திகளைக் கையாள்வதில் நிர்வாகத்திற்கு முரணாகச் செயல்பட்டதால் "தந்தி டிவி யின் தலைமைச் செய்தியாசிரியர் பொறுப்பிலிருந்து விலக்கப்பட்டார் பாண்டே" என்ற கதை வாட்ஸ் – அப் எங்கும் வட்ட மடித்துக் கொண்டிருந்த சூழலில், பாண்டேவின் ஆதி கதையை அறிந்துகொள்ள அவரது இல்லத்தில் சந்தித்தேன்.

"சென்னையில கடந்த 13 வருஷத்துல நான் மாறியிருக்கிற பத்தாவது வீடு இது. சொந்த வீடு இல்ல தலைவா…..வாடகை வீடு" என்று சிரித்தபடியே வரவேற்றார். அப்படியே மனைவி கவிதாவிடம் இரண்டு காபிக்கு பணிவுடன் ஆர்டர் தந்துவிட்டு நிமிர்த்தவர், தன் பூர்விகத்திலிருந்தே தொடங்கினார். "அப்பா ரகுநாதாச்சார்யாவுக்கு பூர்விகம் பிஹார். ஒட்டிப் பிறந்த உறவுகளோட அவருக்கு சின்னதா உரசல். "போங்கடா"னுட்டு இந்தப் பக்கம் வந்துட்டாரு. நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே ஸ்ரீவில்லிபுத்தூரில் தான். பொண்ணு கட்டினது ஸ்ரீரங்கம்".

🍁எப்படி ஊடகத்துக்குள் வந்தீர்கள்?

நான் டவுசர் போட்ட காலத்துலயே மீடியா ரசிகன். நிகழ்ச்சிகளுக்குப் போனா பிரஸ் கேலரிக்கு பக்கத்தில் உட்கார்ந்து, பத்திரிக்கையாளர்கள் என்ன செய்யுறாங்கனு கவனிப்பேன். ஏழாம் கிளாஸ் படிக்கிறப்ப ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் ஸ்ரீவில்லிபுத்தூர்னு ஒரு வாசகர் வட்டம் ஆரம்பிச்சோம். வார, மாதப் பத்திரிக்கைகளை வாங்கி சுத்துல விட்டுப் படிப்போம். பிளஸ் ஒன் வந்ததும் 'படிச்சது போதும்டா மாப்ள… இனி நம்மளே பத்திரிக்கை ஆரம்பிக்கணும்'னு முடிவெடுத்தோம். பிரிண்ட் பண்ணற அளவுக்கு வசதி இல்லாததால, கையெழுத்து பிரதியில் 38 பக்கத்துல 'வெண்ணிலா'ன்னு ஒரு வாரப் பத்திரிக்கையை 1991ல ஆரம்பிச்சோம். நான் தான் ஆசிரியர். வாரம் ரெண்டு பிரதிகளை தயாரிச்சு, எங்க ஊரு அரசு நூலகத்துலயும், வெலிங்டன் நூலகத்துலயும் படிக்க போடுவோம். பத்திரிக்கையோட கடைசி நாலு பக்கங்களைக் காலியா விட்டிருப்போம். படிக்கிறவங்க அந்த பக்கத்துல தங்களோட எண்ணங்களை வாசகர் கடிதமா எழுதிட்டு போவாங்க. அப்பவே தேர்தல் கருத்து கணிப்பு நடத்துன கூட்டம் நாங்க. 'சுயேச்சை வேட்பாளர் தாமரைக்கனி தான் ஜெயிப்பார்'னு கருத்துக் கணிப்பு போட்டோம். ராஜிவ் அனுதாப அலையையும் தாண்டி, அவரே ஜெயிச்சார். இப்படி ஆரம்பிச்ச அனுபவம் தான் ,'தினமலர்' தொடங்கி இப்போ 'தந்தி டிவி' வரைக்கும் வந்து நிக்குது.

🍁புத்தகம் வாசிப்பு, பத்திரிக்கை… அப்படியென்றால் படிப்பு?

அது தனியே நடந்துகிட்டு தான் இருந்துச்சு. எம். ஏ., தமிழ் மாணவன் நான். மத்தபடி வாசிப்பு தான் நம்மளை இங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கு.

🍁திருமண வாழ்க்கை, குழந்தைகள் பற்றி பேசலாமா?

எங்க திருமணம் ஊரறிய உலகறிய நடந்த காதல் திருமணம். கவிதாவுக்குச் சொந்த ஊரு ஸ்ரீரங்கம். படிக்கிறதுக்காக ரெண்டே ரெண்டு வருஷம் எங்க ஊருக்கு வந்திருந்தாங்க… அப்ப தான் நம்மகிட்ட சிக்கிட்டாங்க… அவங்க வீட்ல ரொம்ப யோசிச்சாங்க. கடைசியில, 'இவனை விட்டா வேற ஆளு கிடைக்க மாட்டான்'னு நினைச்சாங்களோ என்னவோ, எனக்கே கட்டி வெச்சுட்டாய்ங்க. எங்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். ஆதித்யஸ்ரீ பிளஸ் டூ படிக்கிறாங்க. ஆத்ரேயா நாலாவது படிக்கிறாங்க.

🍁தொலைக்காட்சி விவாதங்களில் சிக்குகிறவர்களை சின்னா பின்னமாக்குகிறீங்களே, மிரட்டல்கள் வந்திருக்கின்றனவா?

தமிழகம் இன்னும் அந்த அளவுக்கு கெட்டு போய்டலை. அதனால கசப்பான அனுபவங்களை நான் கடக்கல. சமூக ஊடகங்களல்ல வம்புக்கு இழுக்கனும்னே என்னைப் பத்தி எதையாச்சும் போட்டு விடுவாங்க. கூடவே, 'இதுதாண்டா பாண்டே நம்பர்'ன்னு சொல்லி என்னோட செல் நம்பரையும் சுத்தல்ல விடுவாங்க. அப்படி வர்ற ஆட்களுக்கு, ராத்திரி ஒரு மணிக்கு கூட பொறுமையா விளக்கம் சொல்லி புரிய வச்சிருக்கேன். திட்டுறதுல கூட மிரட்டல் வெளிப்பட்டதா ஞாபகம் இல்லை. 'வந்தேறி'ம்பாங்க, இல்லாட்டா சாதியை இழுப்பாங்க அவ்ளோ தான்.

🍁இதுவரை நீங்க பேட்டி கண்டவர்களிலேயே சவாலா இருந்தவர் என்று நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்கள்?

சவால்னு சொல்ல மாட்டேன். கவனமா இருக்கணும்னு உணர்ந்துக்கிட்டது ரெண்டு பேருகிட்ட ஒருத்தர் ப.சிதம்பரம் இன்னொருத்தர் சுப்ரமணிய சுவாமி, ரெண்டு பேரும் லேசுப்பட்டவங்க இல்ல.

🍁பேட்டியின் போது உங்களை வியக்க வைத்த மனிதர்?

நரேந்திர மோடி, பேட்டிக்காக போட்டிருந்த இருக்கையை பார்த்துவிட்டு, 'இவ்வளவு கிராண்டா இருக்கணுமா…….சாதாரணமா இருந்தா போதுமே' என்று தயங்கினவரோட, ஒன்றரை மணி நேரம் உரையாடினேன். அவரோட தொலைநோக்குப் பார்வையையும் கெட்டிக்காரத்தனத்தையும் கண்டு பிரமிச்சு போனேன்.

🍁வீட்டிலும் எல்லோரிடமும் கேள்விமேல் கேள்வி கேட்டுக்கொண்டேதான் இருப்பீர்களா?

ஐய்யய்யோ… வீட்டுக்குள்ள நம்ம ராஜ்ஜியம் செல்லாது. அம்மாவும் மகள்களும் கூட்டணி சேர்ந்தாங்கன்னா நம்மள தொலைச்சிடுவாங்க.

🍁ஒரு சார்பு நிலையுடன் செயல்பட்டதாக 'தந்தி டிவி' நிர்வாகம் உங்களைப் பணியிலிருந்து நீக்கிவிட்டதாக ஒரு செய்தி ஊர் சுற்றுகிறதே?

இப்படி கதையை கிளப்புறவங்க தான் அதுக்கும் விளக்கம் சொல்லணும். இதுக்கு நான் என்ன விளக்கம் சொன்னாலும், அதிலேர்ந்தும் ஒரு புள்ளியை எடுத்து இன்னொரு சர்ச்சையை உருவாக்கிடுவாங்க. எப்போதுமே ஏற்பாளர்களும் எதிர்ப்பாளர்களும் இருக்கத்தான் செய்வாங்க. நேத்து கவுதமியை பேட்டி எடுத்தேன். நாளைக்கு தயாநிதிமாறனை பேட்டி எடுக்கப்போறேன். நம்ம வேலை எப்பவும் மாதிரி ஓடுது. கதை அது பாட்டுக்கு ஓடுது!

🍁மக்களை அதிகம் கடுப்பேற்றும் நெறியாளர் என்றும் உங்களுக்கு ஒரு பெயர் இருக்கிறது. நாஞ்சில் சம்பத் கூட சமீபத்தில் அப்படிச் சொல்லி உங்களை கலாய்த்திருக்கிறாரே?

இதுக்கெல்லாம் எந்த அர்த்தமும் கிடையாதுண்ணே! உண்மையைச் சொல்லனும்னா நாஞ்சில் சம்பத் என்னோட தீவிர ரசிகர். பல தடவை என் கன்னம் தடவிக் கொஞ்சியிருக்கிறார். 'என்ன மூளைடா உனக்கு' ன்னு சொல்லி கட்டித் தழுவியிருக்கார். என்னை திட்டுறவங்க தான், அதிகம் என் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பார்க்கிறவங்கங்கிற உண்மை எனக்கு தெரியும். மக்கள்கிட்ட தொடர்ந்து நம்ம பேரை எடுத்துக்கிட்டுப் போறவங்கங்கிற வகையில், என்னோட விமர்சகர்களுக்கு நான் நன்றிக் கடன் பட்டிருக்கேன்!

“தந்தி” பாண்டே பேட்டி

– குள.சண்முகசுந்தரம்
படம்: எல்.சீனிவாசன்
காமதேனு வார இதழ், 25 மார்ச் 2018

One response to “மோடியின் கெட்டிக்காரத்தனத்தை கண்டு பிரமிச்சு போனேன்”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பெரும்பாடு குணமாக

நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...